விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி வீட்டில் இருந்தே திடீரென மாயமாகியுள்ளார். பள்ளிக்குச் சென்று திரும்பி மீண்டும் வீட்டுக்கு வருவார் வீடு திரும்பியுள்ளார் என சிறுமியின் பெற்றோர் காத்திருந்துள்ளனர். வெகு நேரமாகியும் திரும்பி திரும்பாததால் அக்கம்பக்கத்தில் மற்றும் பள்ளி வளாகத்தில் பெற்றோர் சிறுமியை தேடி உள்ளனர். தொடர்ந்து பெற்றோர்கள் ஒலக்கூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் செல்போன் என்னை ஆய்வு செய்ததில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது அந்த சிறுமி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவரை instagram மூலம் பழகி பின்னர் அது நாளடைவில் காதலாக இருவருக்கும் மலர்ந்துள்ளது. தொடர்ந்து இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இளைஞர் கார்த்திக் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளி மாணவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
இதையும் படிங்க: பாமக தலைவர் இல்ல திருமண விழாவில் விஜய் மகன் - பங்கேற்க யார் காரணம் தெரியுமா?
இதையும் படிங்க: இனியும் உங்க நாடகம் எடுபடாது.. தமிழக அரசின் பழைய ஓய்வூதிய திட்ட குழு தொடர்பாக புட்டுப் புட்டு வைத்த ராமதாஸ்.!