''திருட்டையும், திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது... எனப்பதிவிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
நீலகிரியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது இந்தி மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கைநீட்டி உறுதி மொழி எடுத்துக் கொண்டிருந்தபோது நகர அணி தலைவியின் வலையலை குன்னூர் 25வது வார்டு கவுன்சிலர் ஜாகிர் உசேன் கழற்ற முயன்ற வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவுடன், ''இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் திரு ஜாகிர் உசேன். திருட்டையும், திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இவங்கள தோற்கடிக்க யாரு கூட வேணாலும் கூட்டணி வைப்போம்.. ஒரே போடாக போட்ட எடப்பாடி!!
இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் திரு ஜாகிர் உசேன்.
திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது! pic.twitter.com/1wQKadFcnY
— K.Annamalai (@annamalai_k) March 4, 2025
ஆனால் அந்த வீடியோவில் ஜாகிர் உசேன் உண்மையில் திருடும் நோக்கில் அந்தப்பெண்ணின் கையில் இருந்த வளையலை பிடுங்கவில்லை. விளையாட்டுத்தனமாகவே வளையலை கழற்றுகிறார். ஆனால், ஒரு போராட்டத்தில் உறுதிொழி எடுத்துக் கொண்டு இருக்கும்போது விளையாட்டுத்தன குறும்புகளை வெளிப்படுத்தலாமா? இதுதான் உங்களது போராட்டத்தின் உண்மையான உணர்வா?'' என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

''உங்களுடைய இடமிருந்து இம்மாதிரியான பதிவுகளை எதிர்பார்க்கவில்லை. படித்தவர் போன்று நடந்து கொள்ளுங்கள். அதிலும் வேறு நீங்கள் ஐபிஎஸ் படித்தவர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். மிக மிக அநாகரீக அரசியல் உங்களுடையது'' எனவும் அண்ணாமலைக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
.
இதையும் படிங்க: எப்படிப்பா உங்கப்பன உறிச்சி வச்ச மாதிரி ஆட்சி செய்கிறாய்..? என ஸ்டாலினிடம் கேட்டேன்.! சைதாப்பேட்டையில் துரைமுருகன் அதிர்ச்சி பேச்சு..!