மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகிறது திமுக. சட்டமன்றத்தில் வஃக்பு மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது... உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளது. இந்நிலையில் வஃக்புக்கு மசோதாவை எதிர்த்து இஸ்லாமியர் சமுதாயத்திற்கு பாதுகாவலானகக் காட்டிக் கொள்ளும் திமுகவே மசூதியை இடிக்கத் துணைப்போனதாக தடா ரஹீம் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், ''இதே திருச்சியில் அனார்பர்க் தர்ஹா இருந்தது. 350 ஆண்டுகளுக்கு பழமையான தர்கா. அந்த தர்காவை என்ன செய்தார்கள் என்றால் தர்காவுக்கு பின்னாடி உள்ள இடம் முன்னாள் காங்கிரஸ் எம்பி அடைக்கலராஜுக்கு சொந்தமான இடமாம். இந்துக்கள் இடத்திற்கு முன்னாடி சுடுகாடு இருந்தால் ஆபசகுணமாக பார்ப்பார்கள். தர்கா என்பது சுடுகாடு தானே.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல ஸ்டாலினுக்கு சாமர்த்தியம் பத்தல... எள்ளி நகையாடிய ராஜேந்திர பாலாஜி...!

அடக்க தளம் தானே. அதனால் இதை காலி பண்ண வேண்டும், இடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கடந்த அதிமுக ஆட்சியில் என்னென்னமோ முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால், முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடனே வேறு யாரும் அல்ல தமுமுக எம்எல்ஏ அப்துல் சமது, இன்னும் சில பேர் போய் உட்கார்ந்து நேருவை அழைத்து உட்கார வைத்து பேசி ஒரு பெரும் தொகை கை மாறுகிறது.

அதன் பிறகு அந்த இடத்தை இரவோடு இரவாக இடித்து விட்டார்கள். அங்கே போய் கேட்க வேண்டுமா? இல்லையா? அப்போது வஃக்பு போர்டு சேர்மனாக இருந்தவர் அப்துல் ரகுமான். உண்மையான, நேர்மையானவராக இருந்திருந்தால் 300, 400 ஆண்டு பழமையான தர்காவை எப்படி இடித்தீர்கள் என்று கேட்க வேண்டுமா? இல்லையா? மூச்சே இல்லை. ஏனென்றால் திமுக தலைமை உத்தரவால் நியமிக்கப்பட்டவர். அவர் எப்படி தலைமையில் எதிர்த்துப் பேச முடியும்? அந்த தர்காவை இடித்து விட்டார்கள். வழக்கு போட்டார்களா? என்றால் இல்லை. இது எவ்வளவு பெரிய அநியாயம்?

400 ஆண்டுகளாக இருந்த தர்காவை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இடித்துள்ளார்கள். அப்படியானால் இதே பாஜக இடித்தால் மட்டும்தான் கூட்டம் போட்டு கடுமையாக தாக்கிப் பேசுவேன். திமுக இடித்தால் நான் சைலன்ட் மூடி போய் விடுவேன் என்றால் அது சமுதாயத்தினுடைய தியாகம் அல்ல... சமுதாயத்திற்கு செய்யக்கூடிய துரோகம் என்பதை இந்த இஸ்லாமிய சமூகம் உணர வேண்டும்'' எனப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வரே இன்னும் ஒரு வருஷம் ஆட்டம் போடுங்க.. திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் பாஜக - அதிமுக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் சரவெடி!