தமிழ்நாடு அரசியல் களம் தூள் பறக்கிறது.. ஆளுகிற திமுக அரசோ ரத்த கண்னீர் வடிக்கிறது.. திமுக ஆட்சிக்கு வந்தது முதலே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிர்க்கட்சிகளே கிடையாது என எகத்தாளமாக பேசிக் கொண்டிருந்த கோபாலபுரம்- சித்தரஞ்சன் சாலை கோஷ்டிகள் இப்போது ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல கதறிக் கொண்டிருக்கின்றனர்... நாளும் அதிமுக, பாஜக, தவெக, நாதக நடத்தும் போராட்டங்களால்!
தமிழ்நாட்டின் முதல்வரான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமது தலைமையில் திறமையான திராவிட மாடல் அரசு நல்லாட்சி தருகிறது; நல்லாட்சியை விமர்சிக்க முடியாமல் எதிர்க்கட்சிகளே இல்லாமல் போய்விட்டனர் என எப்போதும் பேசி வருகிறார்..
ஆனால் எங்கிருந்துதான் பீனிக்ஸ் பறவைகள் போல ஒட்டுமொத்த ஒருசேர எதிர்க்கட்சிகள் புறப்பட்டனவோ.. ஒவ்வொரு நாளும் தலைநகரம் சென்னை முதல் கடைகோடி கன்னியாகுமரி வரை ஆளும் திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.. அரசுக்கு எதிரான முழக்கங்கள் விண்ணைப் பிளக்கின்றன.. குறிப்பாக அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில்!
இதையும் படிங்க: வந்த உடனேயே கைதா? ஆர்ப்பாட்டம் நடத்த விடுங்கப்பா? போலீஸாரிடம் கொந்தளித்த சீமான்
திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி, நீட்சி என நீட்டி முழங்குகிற திமுகவுக்கு எதிராக பாஜக ஏன் எதுவும் செய்யவில்லை என்கிற 'தேசபக்தர்களின்' கேள்விகளுக்கு இப்போது மெல்ல மெல்ல விடை கிடைத்துக் கொண்டிருக்கிறது என்கிற பாதையில்தான் அதிமுக, பாஜக, தவெக, நாதக என அனைத்தும் திமுக அரசை விளாசிக் கொண்டு 'போராட்ட' வேட்டை நடத்துகின்றன.
அண்ணா பல்கலைக் கழக மாணவி வன்புணர்வு சம்பவத்தில் சிக்கிய ஞானசேகரனுக்குப் பின்னால் இருக்கும் சீக்ரெட் சார் யார் என்பதுதான் அதிமுக, பாஜக, நாதக, தவெகவின் கேள்வி. சீக்ரெட் சார் பற்றி ஏன் இப்படி கள்ளத்தன மவுனத்தை காட்டுகிறது திமுக அரசு என்பதுதான் இந்த கட்சிகளின் கேள்வி. மடியிலேயே கனத்துடன் பம்முகிற திராவிட மாடல் நல்லாட்சியால் எப்படி பதில் சொல்லிவிட முடியும்? அதற்காக எதிர்க்கட்சிகள் ஜனநாயகக் கடமையை செய்யாமலா இருக்க முடியும்?
இருந்த இடமே தெரியாமல் போனது அதிமுக என்று விளையாடிக் கொண்டிருந்த திமுகவினருக்கு அதிமுக காட்டியிருக்கும் 'எம்ஜிஆர்' முகம், திகிலடித்தானாகத்தான் இருக்கிறது. டெல்லிக்கும் தமிழக தலைமைக்கும் முட்டல் மோதல் என முட்டு சந்தில் முக்காடு போட்டு முனகிக் கொண்டிருந்த திமுக கூட்டணியினருக்கு பாஜகவின் 'நட்புடா' 'அன்புடா' என ஆதரவுக் கரம் நீட்டுவதுடன் போராட்டத்தை அறிவித்திருப்பதும் பீதியாகத்தான் இருக்கும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் எனவும் விசிலடிச்சான் குஞ்சுகள் எனவும் அசால்ட்டாக டீல் செய்த திமுகவினருக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக வீராங்கனைகள் காட்டிய வேகம் வியர்க்க வைத்திருக்கிறது.. என்ன பெரிய சீமான்? என்ன பெரிய போராட்டம் நடத்தியிருக்கிறது? என எகத்தாளமாக பேசிய திமுகவினருக்கு தலைநகரை அலறவிட்ட சீமானை கைது செய்துதான் நிம்மதியடைய முடிந்திருக்கிறது.. தமிழகத்தில் இயல்பாகவே பாஜக- அதிமுக- நாம் தமிழர் கட்சி- தவெக கை கோர்த்து 'எதிர்கால' அரசியல் பாதை எப்படியானது என்பதை அழகாய் எடுத்து காட்டியிருக்கிறது... இதனால்தான் உதயசூரியன் ஓடி ஒளிந்து கொண்டு ரத்தக் கண்ணீர் ராதா போல கதறியழுகிறது பரிதாப திமுக!
இதையும் படிங்க: 21 முறை விளக்கம் கொடுத்துருகேன்..!! இரட்டை வேடம் போடும் தி மு க ஸ்டாலின் : ஜெய்சங்கர் கடும் தாக்கு