திமுக தலைமையிலான திமுக கூட்டணி அரசு தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு ஆண்டு எஞ்சியிருக்கிறது. அதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. பூத் கமிட்டி கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார். அதிமுக, பாரதிய ஜனதா கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது.

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தனது பொதுக்குழு கூட்டத்தை அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அந்த வகையில், ஒவ்வொரு கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: 10 மசோதா பாணியில் நீட் தேர்வு ரத்து… உச்சநீதிமன்றத்தை நம்பி களத்தில் இறங்கும் திமுக..!

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் எல்லாம் இப்போதே கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டன. இந்த நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க.வும் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன. வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுரையில் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட திமுக தலைமை திட்டமிட்டு வருகிறது.

இந்தக் கூட்டத்தில், அரசியல் ரீதியாகவும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. மேலும், சட்டசபை தேர்தல் தொடர்பாக தி.மு.க நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் பணிகளில் மேலும் வேகம் காட்ட தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுக- பாஜக அவசரக் கூட்டணி… காலத்தின் கட்டாயமா..? திமுக ஆட்சியை வீழ்த்துமா..?