நேற்று நெல்லை திமுக பாளையங்கோட்டை பகுதி கழகம் சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமானது பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழகத்தின் இளைஞர்களை சீமான் ஏமாற்றுகிறார். சட்டப்படி நாம் தமிழர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது. நான் நீதிமன்றத்தை நாடினால் அந்த பெயரையே இனி சீமான் பயன்படுத்த முடியாது” என எச்சரித்தார்.

பிரபாகரன் படத்தை ஒட்டிவைத்து சீமான் போர்ஜரி செய்து வருகிறார். விடுதலை புலிகள் பிரபாகரன் சீடர்கள் 48 பேர் ஜாமீன் மீதான வழக்கில் நான் ஆஜராகி காப்பாற்றிய கட்சி தி.மு.க. என்பதை சீமான் மறக்க கூடாது. பிரபாகரனையும், விடுதலை புலிகளையும் காப்பாற்றியது தி.மு.க. மற்ற கட்சிகள் எல்லாம் பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர் என்றார்.
இதையும் படிங்க: 'திராவிடம் என்பது ஏமாற்று வேலை. அது இனி தமிழகத்தில் உதவாதது...' சீமானுக்கு ராதாரவி தீவிர ஆதரவு..!

பரந்தூர் விமான நிலைய பிரச்சனையில் ஒரு நடிகர் நேற்று நாடகம் ஒன்றை ஆடினார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டுக்காகவா விமான நிலையம் கேட்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்தை மதுரைக்கு நிகராக கனிமொழி எம்.பி. முயற்சியால் மாற்றியுள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு இடம் கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர். விமான நிலைய பிரச்சினை குறித்து முன் பின் விசாரிக்காமல் விஜய் பேசுகிறார். பரந்தூரில் விஜய் வியாபாரம் செய்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பரந்தூர் பகுதியில் 443 பேர் வாக்களித்ததில் 51 சதவீதம் தி.மு.க.வுக்கு தான் விழுந்துள்ளது. இதில் தி.மு.க.வை அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள் என்பதே அர்த்தம். பரந்தூர் பகுதி வாக்குசாவடியில் அனைத்து கட்சிகளைவிட தி.மு.க.விற்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது எனக்கூறினார்.
இதையும் படிங்க: ஏய்..! பெரியாரிஸ்டுகளே... முதல்ல உங்க வீடுகள்ல அம்பேத்கர் போட்டோ இருக்கா..? நேரடி சவால் விட்ட சீமான்