''அமமுக காற்றில் கரைந்த கற்பூரம் போல கரைந்து கொண்டிருக்கிறது'' என டி.டி.வி.தினகரனுக்கு
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், ''சொந்த நலனுக்காக அதிமுகவை பலவீனப்படுத்தி விட்டார் என்று எடப்பாடியாரை பற்றி அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
தினகரன் இந்த கருத்தை சொல்வதற்கு முன்பு எதார்த்தத்தை அவர் புரிந்து கொண்டு பேசுகிறாரா? அல்லது புரிந்தும் புரியாதது போல் அவர் பேசி வருகிறாரா? ஆனால், ஒன்று மட்டும் தெரிகிறது. அவர் 100 சகவீதம் விரக்தியில் தான் பேசுகிறார். இயலாமையில் பேசுகிறார் என்பது மட்டும் நமக்கு அவருடைய பேச்சிலே தெரிகிறது.
இதையும் படிங்க: அம்மா இருந்தபோது ஆர்.பி.உதயகுமார் அப்படிப் பேசியிருந்தால் 'செ...பு' பிஞ்சிருக்கும்… புகழேந்தி ஆவேசம்..!

அவை எதிர்த்து, வீழ்த்த, இரட்டை இலையை வீழ்த்த, அமுமுக என்ற கட்சியை தொடங்கியபோது அந்தக் கட்சியிலே அவரோடு இருந்த தலைவர்களும் ,தொண்டர்களும், அவரை நம்பி வாக்களித்த மக்களும், இப்போது அமமுக பொதுச்செயலாளர் செல்லுகின்ற பாதை ,அவருடைய அரசியல் பாதை, அரசியல் கொள்கை, அரசியல் லட்சியம் முற்றிலும் மக்களுக்கு விரோதமானது, தொண்டர்களுக்கு விரோதமானது என்பதை அதிமுகவுக்கு விரோதமானது என்பதை புரிந்து கொண்ட அமுமுக தலைவர்கள், நிர்வாகிகள்,தொண்டர்கள், அவர் அறிமுகப்படுத்தியவர்கள் ஒவ்வொரு நாளும் நாளும் ,அமுமுக கட்சியில் இருந்து வெளியேறி கொண்டே இருக்கிறார்கள்.
ஒரே ஒரு கேள்விதான். இந்த கருத்தைச் சொன்ன அமுமுக பொதுச் செயலாளர் தினகரன் பணிவுடன் கேட்கிறேன் நீங்கள் கட்சி தொடங்கியதற்கு பிறகு உங்களிடம் இருந்து வெளியேறியவர்களுடைய எண்ணிக்கை எத்தனை? நீங்கள் கட்சியை தொடங்கிய பிறகு உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களோடு வந்து சேர்ந்த ஒரு தொண்டருடைய பெயரை நீங்கள் வெளியிட்டால் அதிமுக பலவீனமாக இருக்கிறதா? பலமாக இருக்கிறதா என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

நீங்கள் கட்சி தொடங்கியிலிருந்து, உங்களிடம் இருந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். உங்கள் கப்பலிலே ஓட்டை விழுந்திருக்கிறது. உங்கள் கப்பல் எப்போது மூழ்கும் என்று தெரிந்து கொண்ட தொண்டர்களும், நிர்வாகிகளும் உங்களை விட்டு தப்பித்து பிழைத்தால் போதும் என்று வெளியேறிக் கொண்டிருக்கிறார்களே? அது உங்கள் கவனத்திலே வருகிறதா... தெரிகிறதா?
இது எல்லாம் நான் சுற்றி வளைத்து பேசவில்லை. நீங்கள் கட்சியை தொடங்கிய பிறகு உங்கள் மீது நம்பிக்கை வைத்துபதிவு செய்யப்பட்ட கட்சிகள், லெட்டர் பேட் கட்சிகள் ,தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் இந்த கட்சியில் இருந்து யாராவது ஒருவர் உங்கள் மீது எனக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று உங்களிடம் வந்து தங்களை இணைத்துக் கொண்டு பொதுவாழ்க்கையில் மக்கள் சேவை செய்வதற்கு எத்தனை பேர்கள் சேர்ந்தார்கள் என்ற விவரத்தை நீங்கள் வெளியிட்டதுக்கு பிறகு இந்த அதிமுகவை பற்றி நீங்கள் கருத்து சொன்னால் அல்லது கவலைப்பட்டால் அல்லது அக்கறையோடு நீங்கள் சொல்லுகிற அறிவுரை அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

உங்களுடைய கட்சி அமுமுக தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை காற்றிலே கரைகிற கற்பூரம் போல் கரைத்து போய்க்கொண்டே இருக்கிறது. இன்னும் விரைவிலே காணாமல் போய்விடும் என்ற நிலையில் மக்கள் தொண்டர்களும் பேசிக் கொடுக்கிறார்கள்.
உங்களிடத்தில் நம்பிக்கை கூறியவர்கள் எல்லாம் வெளியேறி விட்டார்கள். ஆகவே அதிமுகவை புனிதரால் உருவாக்கப்பட்ட இந்த வரலாறு உங்களுக்கு நன்றாக தெரியும் மக்கள் ஆதரிப்பதால், அதிமுகவில் பணியாற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எதிர்காலம் எல்லாம் பிரகாசமாக இருக்கிறது. அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். அது குறித்து நீங்கள் கவலைப்படவும் வேண்டாம். ஆடுகள் நினைகிறதே என்று ஓநாய்கள் கவலைப்படுகிற பழமொழியாகத்தான் இது பார்க்கப்படுகிறது
பாலூட்டி,சோறுட்டி , தாயாக தந்தையாக இந்த இயக்கத்தை அம்மாவின் மறைவிற்கு பிறகு வலிமையுள்ள இயக்கமாக, ஆளுமை உள்ள இயக்கமாக மாற்றியுள்ளார் எடப்பாடியார். இன்றைக்கு ஒரே எதிரியாக திமுக அடையாளம் காணப்பட்டு விட்டது. ஆகவே எதிரியை எதிர்ப்பதிலும், வெல்வதிவதில் தான் அதிமுக தொண்டர்கள் போர்பரணி பாடி களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை நீங்கள் மூளை செலவை செய்வதை போல அவர்களுக்கு குழப்பம் ஏற்படுவதைப் போல,சஞ்சலம் ஏற்படுவதைப் போல, சோர்வு ஏற்படுவதைப் போல ,நீங்கள் எதை சொன்னாலும், எத்தனை கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டாலும், எத்தனை கதைகளை கட்டுரைகளை கருத்துக்களை அவதூறுகளை பரப்பினாலும், உங்களை நம்புவதற்கு இந்த நாட்டிலே ஒரு ஜீவனும் முன்வரவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை.
ஆகவே இதை புரிந்து கொண்டு நீங்கள் உங்கள் அரசியல் பயணத்தை தொடர்ந்தால் உங்களுக்கு எஞ்சி இருக்கிற காலமாவது, மிச்சம் இருக்கிற காலமாவது உங்கள் இந்த தமிழக அரசியலில் நீங்களும் பங்கு பெறுகிற ஒரு நிலை இருக்கும். இல்லை என்று சொன்னால் உங்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.
இன்னும் நீங்கள் அதிமுகவை பலவீனப்படுத்துவதற்காக நீங்கள் கருத்துக்களை சொல்வீர்களானால் உறுதியாக சொல்லுகிறேன் நிறைவாக சொல்கிறேன் ,உறுதியாக சொல்லுகிறேன் ,இறுதியாக சொல்லுகிறேன் அமமுகவில் உங்களைத் தவிர வேறு யாரும் உங்களோடு இருக்க மாட்டார்கள் என்பதுதான் காலம் சொல்லப் போகிற தீர்ப்பு'' என அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஓ.பிஎஸிடம் வைத்துக் கொள்… என்னிடம் வேண்டாம்…' ஆர்.பி.உதயகுமாரை வெளுத்து வாங்கிய செங்கோட்டையன்..!