தமிழகத்தில் சமீப காலமாக போதை பழக்க வழக்கங்களால் இளைஞர்கள் திசை மாறுவது தொடர்கதையாகி உள்ளது. மது குடித்துவிட்டு நடு ரோட்டில் தகராறில் ஈடுபடுவதும், கஞ்சா போதையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. கஞ்சா போன்ற போதைப்பொருள்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கஞ்சா ஆப்ரேஷன் 1.0 என துவங்கி கஞ்சா ஆப்ரேஷன் 4.0 வரை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை தமிழக காவல்துறை மேற்கொண்டது. கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் முடக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடுவது முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் பிற மாநிலங்களில் முக்கியமாக, வட மாநிலங்களில் இருந்து கஞ்சா ரயில் மூலம் கடத்திவரப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்வது தொடர்கிறது. இவற்றை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், வட மாநில தொழிலாளர்கள் மூலம், சில மாணவர்களை மிரட்டியும் தமிழகத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த சட்டக்கல்லூரி மாணவியை போதை கும்பல் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.80 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. நடுக்கடலில் நடந்த அதிரடி சேசிங்.. அயன் படத்தை மிஞ்சும் கடத்தல் ப்ளான்..!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் சிலர், கஞ்சா புகைத்து கொண்டு இருந்துள்ளனர். மேலும் அந்த வழியே செல்லும் பொதுமக்கள், பெண்களை தரைகுறைவாக பேசி அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியின் அருகில் வசித்து வரும் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், அந்த இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர்கள் கஞ்சா போதையில், மாணவியை தரக்குறைவாக பேசியதோடு மட்டுமல்லாமல் சீண்டலில் ஈடுபட்டதாகும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரோந்து பணியில் வந்த ராயப்பன்பட்டி காவல் நிலைய ஆய்வாளரிடம் மாணவி புகார் தெரிவித்துள்ளார்.

உடனே அப்பகுதிக்கு வந்த காவல் ஆய்வாளர் போதை இளைஞர்களை எச்சரித்து மட்டும் சென்றுள்ளார். மாணவி போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவியிடம் மீண்டும் பிரச்னை செய்துள்ளனர். மாணவியை அவதூறாக பேசி சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளானர். இதனை அடுத்து மாணவியின் பாட்டி இளைஞரின் வீட்டிற்கு சென்று கேட்டபோது ஆத்திரமடைந்த இளைஞர் இரும்பு வாலியால் மாணவியை தாக்கியுள்ளார். இதனால் மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கஞ்சா போதை இளைஞர்களில் அட்டூழியம் அதிகமாகவே, இதுகுறித்து ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் மாணவி புகார் தெரிவித்டார். ஆனால் இரண்டு நாட்களாக புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மாணவி நேரில் புகார் அளித்துள்ளார்.அரசு பள்ளியில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்ததால் தன்னை தாக்கிய இளைஞர் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத்திடம் மாணவி புகார் மனுவை அளித்தார்.
இதையும் படிங்க: போதை மருந்து கொடுத்து பல பெண்களை சீரழித்த மாணவன்..? மாதத்திற்கு 5 பெண்கள் என போலீசார் அதிர்ச்சி தகவல்..!