எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆடிப் போய்க் கிடக்கின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸிடம் இருந்து முதல்வர் பதவியை பறித்து, சசிகலா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடலாம் எனப் போட்ட திட்டத்தை, டெல்லி பாஜக மேலிடம் முறியடித்து விட்டது. சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்ந்தெடுத்த நிலையில், பொறுப்பு கவர்னராக இருந்தவர் டெல்லியிலயே உட்கார்ந்து விட்டார். அதே வேகத்தோடு சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பும் மின்னல் வேகத்தில் வந்தது. சசிகாலா சிறைக்குப் போகும்போது, கூவத்தூரில் நடந்த கூட்டத்தில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்த நேரத்தில் செங்கோட்டையன் பெயர்தான் முன்மொழியப்பட்டுள்ளது.

ஆனால், பொருளாதாரத்தால் , எடப்பாடி பழனிசாமி முதல்வராகி விட்டார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையனும் இணைந்த கைகளாகித்தான் இருந்தார்கள். ஆனால், தற்போது அவர்களுக்குள் எவ்வாறு மோதல் ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாமல், ரத்தத்தின் ரத்தங்கள் திணறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: அதிமுகவை அழிக்கும் ஈகோ... செங்கோட்டையன்தான் சீனியர்- உற்சாகத்தில் ஓ.பி.எஸ்
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் குணமே அப்படித்தான் என, அவரிடம் இருந்து துரத்தப்பட்ட அதிமுகினர் சொல்கிறார்கள். எந்தெந்த மாவட்டத்தில் யார் செல்வாக்காக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஒரு கோஷ்டியை உருவாக்கி, செல்வாக்குள்ள தலைவர்களை முடக்கி விடுவதுதான் அவரது அரசியல் நுணுக்கம். அந்த வேலைதான் செங்கோட்டையிலும் நடந்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

செங்கோட்டையனுக்கு எதிராக ஒரு கோஷ்டியை ஏற்படுத்தியது, அந்தியூரில் பிறந்த எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். என்றாலும் சோட்டையன் மீது கை வைக்க வேண்டாம், அவரை கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும் என அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி எடுத்துக் கூறி இருக்கிறார். அதன்படியே எடப்பாடிபழனிசாமியும் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார். செங்கோட்டையனே அடங்கி போய் விடுவார் என்றும் நினைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கே வழிகாட்டியவன் நான், என்னிடம் எந்த பாட்ஷாவும் பலிக்காது என்கிற நிலைக்கு வந்துள்ளார் செங்கோட்டையன். இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு தூக்கம்போய் பல நாட்கள் ஆகி விட்டது. அவரை நினைத்து நாளுக்கு நாள் ஆவேசமாகிக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில்தான், நேற்று இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ''ஏன் என்னை தவிர்க்கிறார் என அவரிடம் போய்க் கேளுங்கள். யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் போகலாம்'' என கடும் கோபத்தில் சொன்னாராம் எடப்பாடி பழனிசாமி. இதில் பெரிய கருத்து பொதிந்திருப்பதாக அதிமுகவினரே கூறுகிறார்கள். செங்கோட்டையன் கட்சியில் இருந்து வௌியே போகலாம் என்ற அர்த்தம் இருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

ஆனால், செங்கோட்டையன் அந்த முடிவுக்கு செல்லமாட்டார் எனவும், இருக்கும்வரை எடப்பாடி பழனிசாமியின் தூக்கத்தை கலைப்பார் எனவும் அதிமுகவினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையமா? இ.பி.எஸ். கண்டனம்