பிரபல சினிமா விமர்சகரான ப்ளூசட்டை மாறன் இப்போதெல்லாம் சமகால அரசியல் குறித்த பதிவுகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இப்போது சினிமாவில் இருந்து சமீபகாலமாக அரசியலிக்குந்தவர்களை பற்றியும், முயற்சி செய்தவர்கள் பற்றியும், அவர்களது அரசியல் நிலைப்பாடு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது ஒரு தரப்பினரை கிளர்ந்தெழச் செய்துள்ளது.
அவரது எக்ஸ்தளப்பதிவில், '' நம்மவர் (கமலஹாசன்) ஊழலை ஒழிக்க டார்ச் லைட்டுடன் வந்தார். ரிமோட்டை உடைத்தார்.பிறகு பட வியாபாரத்திற்காக சிகப்பு பூதத்துடன் கை கோர்த்தார்.கடைசியில் சூரியனுடன் ஐக்கியமாகி... இப்போது ராஜ்யசபா சீட்டுக்காக காத்திருக்கிறார்.
தலீவர்: (ரஜினிகாந்த்) சிஸ்டம் சரியில்லை. ஆன்மீக அரசியல் மூலம் தமிழகத்தை மீட்பேன் என்று துள்ளினார். பிறகுயூடர்ன் அடித்து பழையபடி ஷூட்டிங் சென்றுவிட்டார்.தற்போது தமிழக அரசியலின் கிங் மேக்கராக தன்னை உணர்ந்து... கொல்லைப்புற அரசியல் செய்கிறார். 2026 தேர்தலில் தாமரைக்கு மறைமுகமாக உதவுவார்.
இதையும் படிங்க: இதோ வந்து விட்டார் திமுக ஆட்சியில் காணாமல் போயிருந்த கட்டப்பா… சத்யராஜை உசிப்பிவிட்ட சீமான்..!

சங்கிமான்: (சீமான்) தமிழ்ப்பற்று முகமூடியை அணிந்து கொண்டு அக்மார்க் B டீம் அவதாரம் எடுத்துள்ளார். எப்போதோ எடுத்தும் விட்டார். சில வருடங்கள் கழித்து.. பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்.பி. ஆகலாம் அல்லது அக்கட்சியின் மாநிலத்தலைவராக கூட ஆகலாம்.
சுறா: (விஜய்) வந்தா மலை. போனா முடி என களத்திற்கு வந்துள்ளார். ஜெயித்தால் சி.எம். தோற்றால் மறுபடியும் உறுதியாக ஷூட்டிங் போய் விடுவார். தற்போதைக்கு லேசாக காவிச்சாய வாடை வருகிறது. ஆக மொத்தத்தில்... இவர்கள் அனைவருமே செமத்தியாக செட்டில் ஆகத்தான் இத்தனை நாடகங்களும். இவர்களை நம்பி நேரம், பணம், எதிர்காலத்தை இழக்கும் ரசிகர்கள் தொண்டர்களுக்கு பட்டை நாமம் உறுதி. சந்தேகம் இருந்தால் நம்மவர் மற்றும் தலீலரின் பக்தர்களுக்கு நேர்ந்த கதியை யோசித்து பாருங்கள். இவர்கள்..திமுக, அதிமுகவை ஒழித்து.. நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என நம்பும் அப்பாவி மக்களுக்கு கிடைக்கப்போவது..இருட்டுக்கடை அல்வாதான்'' என விமர்சித்துள்ளார். இந்த பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'அந்த கைத்தடியா..? இந்தத் துப்பாக்கியா..? திராவிட பெரியாரை வீழ்த்தாமல் விடமாட்டேன்..!' மீண்டும் சினம் கொண்டு சீறும் சீமான்..!