ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனையில் நாம் தமிழர் கட்சி வேட்பு மனு ஏற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சி சின்னம் குறித்து சீமான் 20ம் தேதி முடிவு செய்து அறிவிப்பார் என்றார்.
இதையும் படிங்க: திமுக வேட்பாளருக்கு ஆராத்தி எடுக்க கியூகட்டி நின்ற பெண்கள்... உ.பி.க்கள் விநியோகித்த '200 ரூபாய்' ..!

தேர்தல் ஆணையம் மிகச் சரியாக இயங்கி வருகிறது. ஜனநாயக அடிப்படையில் இந்த தேர்தல் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. திமுகவை தத்துவார்த்தமாகத்தான் எதிர்த்து போட்டியிடுகின்றேன், திமுக உறவுகள் யாரையும் நான் எதிர்க்கவில்லை. திமுகவினர் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. திமுக தரப்பிலிருந்து தனிப்பட்ட முறையில் யாரும் என்னிடம் பேசவில்லை. போட்டியிட வேண்டாம் என்றோ போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்றோ என்னிடம் யாரும் பேசவில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அட.. அந்த செந்தில் முருகனாப்பா இவரு..? ஈரோட்டில் சுயேட்சையாக களமிறங்கி கிச்சுக் கிச்சு மூட்டும் அதிமுக பிரமுகர்..!