மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. அதுபோல ஒரு சூழ்நிலை இப்போது இல்லை
ஒரு காலத்தில் இருந்தது. அது இரு அணிகளாக இருந்த போது இருந்தது. எடப்படியார் கட்சியை எடுத்துவிட்டார். நல்லதை செய்ய போகிறார்.

செங்கோட்டையன் எங்கள் மூத்த சகோதரர்.செங்கோட்டையன் காவல்துறை பாதுகாப்பு கேட்டாரா.ஆனால் போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளார்கள்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கும் இடத்திலும், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடாமல் கேட்காத ஒருவருக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள் என்றார்.
இதையும் படிங்க: “யாருகிட்ட… எடப்பாடியார் டா… “ - திமுகவை அதிர வைத்த ஆர்.பி.உதயக்குமார்… 82 மாவட்டங்களில் அதிரடி …!

உறுதியாக இறுதியாக 2026ல் ஆட்சி மலரும். எடப்பாடி ஆட்சி அமைப்பார். முதல்வரார். அடுத்த கட்சியை பற்றி பேச வேண்டிய தேவை இல்லை.
அதிமுக பிரச்சனையில் பாஜக பின்ணனியில் உள்ளதா என்பது குறித்த கேள்விக்கு, அடுத்த கட்சியை பற்றி பேச வேண்டியதில்லை. இந்த பிரச்சனையை பற்றி செங்கோட்டையன் மிகத்தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார் என்றார்.
இதையும் படிங்க: எடப்பாடியார் இல்லாத அதிமுக… பாஜக போடும் பகீர் திட்டம்… அடுத்த பொதுச்செயலாளர் யார்..?