தொகுதி மறுசீரமைப்பில் எந்த மாநிலத்துக்கும் மக்களவை, மாநிலங்களவை எண்ணிக்கை குறையக்கூடாது, நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த இடங்களும் பாதிக்கப்படக்கூடாது என்று பிரமதர் நரேந்திர மோடிக்கு, ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தென் மாநிலங்களில் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சி குறைந்துவிட்டது. மத்திய அரசு குடும்பகட்டுப்பாடு, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை வலியுறுத்தியதால் அதை தீவிரமாக தென் மாநிலங்கள் கடைபிடித்ததால் மக்கள் தொகை குறைந்துள்ளது. ஆனால் தொகுதி மறுசீரமைப்பு உண்மையாகவே தற்போதுள்ள மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தால், தென் மாநிலங்களுக்க நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தக் குறைவும் ஏற்படக்கூடாது.
இதையும் படிங்க: ஏழு மலைகளும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தம்.. இதில் வணிகத்திற்கு இடமே கிடையாது.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி..!
தற்போதுள்ள மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், நாடாளுமன்றத்துக்கு தென் மாநிலங்கள் சார்பில் செல்லும் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையும் என்ற கவலை இருக்கிறது. அதற்காகவே தென் மாநிலங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

தேசிய கொள்கை உருவாக்கத்தில் தென் மாநிலங்கள் பங்கெடுக்க முடியாமல் குறைக்க நேரிடும். நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக, தொகுதி மறுசீரமைப்பு செயல்முறை மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தக்கூடாது.
அனைத்து மாநிலங்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், கொள்கை உருவாக்கத்தில், திட்ட உருவாக்கத்தில் அனைத்து மாநிலங்களும் குரல் கொடுக்க சமத்துவம் இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் இருந்து போதுமான பிரதிநிதித்துவம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இருந்தால்தான், தேசிய கொள்கை உருவாக்கத்தில் தேசிய நலன் பிரதிபலிக்கும். எனவே, தொகுதி மறுசீரமைப்பு அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யுமாறும், எந்தவொரு மாநிலமும் அதன் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் குறைப்பை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உங்களைக் கேட்கிறேன்”
இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டிய கூட்டு நடவடிக்கைக் குழு சென்னையில் நடைபெற்றது. இதில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒய்ஆர் காங்கிரஸ் பிரதிநிதி விஜய்சாய் ரெட்டி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் திமுக..! சித்து, ஜெகனுடன் சந்திப்பு.. கடுப்பில் பிஜேபி..!