இம்ரான் கானின் அல் காதிர் பல்கலைக்கழக தி்ட்ட அறக்கட்டளையில் இருவரும் சேர்ந்து ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது நிரூபிக்கப்பட்டதையடுத்து, இருவருக்கும் இந்த தண்டனையை இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இன்று வழங்கியது.

மேலும், இம்ரான் கானுக்கு 3500 டாலர்(ரூ.3.12 லட்சம்), அவரின் மனைவிக்கு பாதியளவு தொகையை அபராதமாக விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இறங்கியபின் இம்ரான் கான் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு பரிசுப் பொருட்களை விற்பனை செய்தல், அரசு ரகசியங்களை கசியவிடுதல், சட்டவிரோத திருமணம் ஆகிய வழக்குகளி்ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. 4வது வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனா- பாகிஸ்தானை வியர்க்க வைக்கும்... இந்தியாவின் சோனாமார்க் சுரங்கப்பாதை..!

கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்திலிருந்து இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் இருந்து வருகிறார். இந்த ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை முடிந்து 3 முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுநிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி நாசர் ஜாவித் ராணா தீர்ப்பில் குறிப்பிடுகையில் “ இம்ரான் கான் அவரின் மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றங்களை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. அதனால் இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்படுகிறார்கள். இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறையும், அவரின் மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும்” எனத் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அல் காதிர் அறக்கட்டளையை இம்ரான் கான், அவரின் மனைவி புஷ்ரா பீபி இருவரும் சேர்ந்து தொடங்கினர். இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை இவர்கள் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து,வழக்குத் தொடரப்பட்டது. இந்த ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: 'பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த தைரியம் இருக்கு… பேச்சுவார்த்தை நடத்த தைரியம் இல்லையா..?' மோடியின் நாடி நரம்பை உலுக்கும் காங்கிரஸின் கேள்வி..!