''மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்களே... வாளாடி உங்கள் உறவினர்கள் வாழும் ஊர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆசிரியைகளுக்கும், மாணவிகளுக்கும் அச்சத்தை போக்கி நடவடிக்கை எடுப்பீர்களா..?'' என பள்ளிக்கலவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கேள்விக் கணைகளை வீசுகின்றனர் அக்கிராம மக்கள்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதி வாலிபர்கள் சிலர் இரவு நேரங்களில் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்று மது அருந்துவது, பெண்களை அழைத்து சென்று உல்லாசத்தில் ஈடுபடுவது என தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மரத்தடியில் வகுப்பறை.. ரூ.7,500 கோடி என்னாச்சு..? திமுக அரசை ரவுண்டு கட்டும் அண்ணாமலை..!
நேற்று முன்தினம் இரவு பள்ளிக்குள், இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணுடன் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற்றுள்ளார். தற்போது பொதுத் தேர்வு நடந்து வருவதால் 10ம் வகுப்பு அறை பூட்டப்பட்டு இருந்தது. அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற இருவரும். வகுப்பறையின் மின்விசிறி, லைட்டுகளை போதையில் உடைத்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணுடன் விடிய விடிய உல்லாசமாக இருந்துள்ளார். போதை தெளியாததால் அந்த பெண்ணுடன் தூங்கியுள்ளார் அந்த இளைஞர்.

காலை விடிந்ததும் அவர்கள் வெளியேறி செல்லவில்லை. நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வகுப்பறைக்குள் ஒரு ஜோடி அரை நிர்வாண கோலத்தில் படுத்துத் தூங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அலறியடித்துச் என்று ஆசிரியர்களிடம் விஷயத்தை கூறி உள்ளனர். வகுப்பறைக்கு வந்த ஆசிரியர்கள் இருவரையும் எழுப்பி இருக்கின்றனர்.அப்போது இருவரும் பதற்றத்தில் எழுந்து சுவர் ஏறி தப்பிக்க முயன்றுள்ளனர். அவர்களை மடக்கிய ஆசிரியர்கள் அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மித மிஞ்சிய மது போதையில் இருந்த அந்த இளைஞர் அலட்சியமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வீடியோவில், ஆசிரியர்கள் அந்த இளைஞரிடம், ''வகுப்பறையில் நுழைந்து இப்படி நடந்துகொள்வது சரியா..? இது பள்ளிக்கூடமா என்ன..? எனக்கேட்கின்றனர். அதற்கு அந்த வாலிபர், ''நேற்று இரவு வெகு நேரமாகிவிட்டதால், பள்ளிக்குள் படுத்திருந்துவிட்டு செல்லலாம் என நினைத்தேன். நான் செய்தது தவறுதான். இப்ப என்ன செய்ய வேண்டும். இப்போ என்னதான் உங்களுக்கு பிரச்னை'' என போதையில் பிதற்றுகிறார். அதற்கு ஆசிரியர்கள், நாங்கள் என்ன லாட்ஜா கட்டிவிட்டுள்ளோம்..? என கேட்க, அயெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் அந்த இளைஞர் அலட்சியமாக, அந்த பெண்ணை சுவரில் ஏற்றி அமர வைத்து ஏதேதோ உளறுகிறார்.

இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள், கல்வி கூடங்களை கலவிக்கூடங்களாக மாற்றும் இதுபோன்ற சமூக விரோதிகளுக்கு சரியான பாடம் புகட்டும் வகையில், கடுமையான தண்டனைகள் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த வாளாடி பள்ளி, அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்டது. அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அத்தை ராணி அம்மையாரின் சொந்த ஊர். திமுகவை சேர்ந்த வாளாடி கார்த்தி மகேஷின் மைத்துனரின் ஊர்.

வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, 2022 ல் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள். ஆகையால், இந்தப்பள்ளியில் நடந்த அத்துமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: போட்டோ வெளியிட்டு மானத்தை வாங்கிய தர்மேந்திர பிரதான்.. ஆடிப்போன அன்பில்..!