பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீபகாலமாக வெளிச்சம் பெற துவங்கி உள்ளன. பாலியல் புகார்கள் குறித்த விழிப்புணர்வே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. விழிப்புணர்வு அடைந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து தங்களது பெற்றோரிடம் கூறும்போது, அதற்கு உண்டாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அத்துமீறலில் ஈடுபட்ட கயவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும் போலீசார் அதி தீவிர நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சில சமயங்களில் பெண்களுக்கு அநீதி இழைக்கும் கயவர்கள் அதை வீடியோ எடுத்து வைத்து அவர்களை தொடர்ந்து மிரட்டுவதும் அரங்கேறி வருகிறது.

இதேபோல் தெலுங்கனாவில் ஓடும் ரயிலில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டும் அல்லாது சிறுமியை சிதைத்த அந்த காமுகன், தனது கீழ்த்தரமான அந்த செயலை வீடியோ வேறு எடுத்துவைத்திருந்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினருடன் ஏப்ரல் 2 ஆம் தேதி ஒடிசாவிலிருந்து ரெயிலிலில் சென்றுகொண்டிருந்தார்.
அதே ரயிலில் பீகாரை சேர்ந்த 20 வயது இளைஞனும் பயணம் செய்துள்ளான். சிறுமியை தொடர்ந்து அந்த சிறுவன் நோட்டம் விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் தெலுங்கானாவில் ரயில் வந்துகொண்டுருந்தது. அப்போது சிறுமி கழிவறைக்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 96 படம் போல ரீயூனியன்.. பள்ளி நண்பனுடன் தொடர்பு.. 3 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்..!

சிறுமியை வெகு நேரமாக நோட்டம் விட்ட 20 வயது சக பயணி சிறுமியை பின்தொடர்ந்து கழிவறைக்கு சென்று உள்ளான். சிறுமியை மிரட்டி, கழிவறையில் வைத்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். கழிவறையில் நடந்த அனைத்தையும் அந்த காமுகன் வீடியோ வேறு எடுத்துள்ளான். கழிவறையில் இருந்து வெளியே வந்த சிறுமி, தனது இருக்கைக்கு சென்றுள்ளா. தனக்கு நேர்ந்த துயரம் குறித்து மன வேதனை அடைந்த சிறுமி இதனை தனது பெற்றோரிடம் கூறினாள்.

சிறுமியின் பெற்றோருக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. உடனே சிறுமியிடம் விசாரித்து, அந்த இளைஞன் யார் என சிறுமியின் தந்தை கேட்டுள்ளார். சிறுமி கூறியதை வைத்து அதே ரயிலில் பயணம் செய்த அந்த இளைஞனை சிறுமியின் தந்தை பிடித்து அடி வெளுத்துள்ளார். பின்னர் அவனின் செல்போனை வாங்கி ஆராய்ந்து பார்த்துள்ளார். தனது மகள் அனுபவித்த துயரம் அதில் வீடியோவாக இருந்ததை பார்த்த தந்தை அதிர்ர்ந்து போனார். அதில் சிறுமியை அவன் வன்கொடுமை செய்யும் வீடியோ பதிவுகள் இருந்துள்ளன.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தனது மகளுக்கு நடந்த அநீதி குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 139 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொண்டு அனைத்தையும் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞனை கைது செய்து விசாரணைக்காக ழைத்து சென்றனர். புகாரின்பேரில் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட இளைஞனிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: காத்துவாக்குல ரெண்டு கல்யாணம்.. காதலிகளை கரம் பிடித்த மன்மதன்.. தெலங்கானாவில் விநோதம்..!