2014ம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத்தில் வாக்குறுதிகள் அளித்து, அதை நிறைவேற்றாமல் கைவிட்டதில் உள்துறை அமைச்சகம் முதலிடத்தில் இருக்கிறது.
உள்துறை அமைச்சகம் 421 வாக்குறுதிகளை மக்களவையிலும், 338 வாக்குறுதிகளை மாநிலங்களவையிலும் அளித்தது. அதில் மக்களவையில் அளித்த வாக்குறுதியில் 15 சதவீதம் அதாவது 63 வாக்குறுதிகளைக் கைவிட்டது. மாநிலங்களவையில் அளித்த வாக்குறுதியில் 12 சதவீதம் அதாவது 40 வாக்குறுதிகளைக் கைவிட்டது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அனைத்து அமைச்சகங்களையும்விட அதிகமான வாக்குறுதிகளைக் கைவிட்டதில் உள்துறை அமைச்சகம் முதலிடத்தில் இருக்கிறது.

மக்களவை அல்லது மாநிலங்களவையில் விவாதத்தின்போது பதில் அளி்க்கையில் ஒரு அமைச்சர் அல்லது அமைச்சகம் சார்பில் அரசாங்கத்தின் தரப்பில் அடுத்த நடவடிக்கையை உள்ளடக்கிய ஒரு உறுதிமொழியை வழங்கினால், அது ஒரு உத்தரவாதமாகக் கருதப்படுகிறது. மக்களின் உரிமைகளுக்கான கண்காணிப்பாளராகச் செயல்படுவதே நாடாளுமன்ற செயல்முறையாகும். அரசால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக 1953 ஆம் ஆண்டு அரசாங்க உத்தரவாதக் குழு உருவாக்கப்பட்டது.
இதையும் படிங்க: வக்ஃப் மசோதாவை யார் ஆதரிப்பது? யார் எதிர்ப்பது..? பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதா?
அரசு தரப்பில், ஒரு அமைச்கம் அல்லது அமைச்சர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்தால், அது நிலுவையில் இருப்பதாக அர்த்தம். அந்த வாக்குறுதியை அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் இல்லாவிட்டால் அந்த அமைச்சகம் வாக்குறுதியை நிறைவேற்ற காலக்கெடுவை நீட்டித்து கேட்கலாம் அல்லது வேண்டுகோள் விடுத்து வாக்குறுதியை கைவிடலாம்.

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு அமைச்சகம் அளித்த வாக்குறுதிகள், அதை நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து ஓஏஎம்எஸ் செயல்முறையில் அதாவது ஆன்லைன் வாக்குறுதி கண்காணிப்பு முறையில் பதிவேற்றம் செய்துவிடும். அந்த இணையதளத்தின் தரவுகளின்படி, 2024ம் ஆண்டு மக்களவையில் அளித்த வாக்குறுதிகளில் 65 சதவீதம் இன்னும் நிலுவையில் இருக்கிறது தெரியவந்துள்ளது. 2023ம் ஆண்டில் 44 % வாக்குறுதிகளும், 2022ம் ஆண்டில் 18 சதவீத வாக்குறுதிகளும் நிலுவையில் இருக்கின்றன.
உதாரணமாக, 2023, மார்ச் 24ம் தேதி காங்கிரஸ் எம்பி பி. மாணிக்கம் தாகூர் அதானி குழுமம் தொடர்பான ஒரு கேள்வியை மக்களவையில் எழுப்பியிருந்தார். அதில் “அரசாங்கத்தால் கட்டப்பட்ட துறைமுகங்கள் எத்தனையில் பணிகள் நிறைவடைந்துள்ளன. அரசுக்குச் சொந்தமான துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது அதானிக்குச் சொந்தமான துறைமுகங்களில் நடைபெறும் வர்த்தகத்தின் அளவை கேட்டிருந்தார்”. ஆனால், இந்தக் கேள்விக்கான பதிலில் அளிக்கப்பட்ட உறுதிமொழி அன்றிலிருந்து நிலுவையில் உள்ளது.
2024ம் ஆண்டில் மாநிலங்களவையில் அளித்த வாக்குறுதிகளில் 66% நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. 2023ம் ஆண்டில் மாநிலங்களவையில் 36%, 2022ல் 24% வாக்குறுதிகள் நலுவையில் உள்ளன. 2014 முதல் 2022 வரை ஒவ்வொரு அமைச்சகமும் வாக்குறுதிகளை அளித்து அதை நிறைவேற்றாமல் விட்டதன் சதவீதம் 2 முதல் 15 ஆக உயர்ந்துள்ளது.

உதாரணமாக, 2014 ஆம் ஆண்டு முன்னாள் மக்களவை உறுப்பினர் சிராஜுதீன் அஜ்மல், மாநில வாரியாக பதிவான தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை மற்றும் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அளிக்காமல் அதை கைவிட்டது.
குறித்து 2014 ஆம் ஆண்டு மக்களவை எம்பி. அசாதுதீன் ஓவைசி 2014 ஆம் ஆண்டு “ போலி என்கவுன்டர்களில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 'முறை மீறிய பதவி உயர்வுகள்' மற்றும் 'வீர விருதுகள்' குறித்து கேட்ட கேள்வியையும் உள்துறை அமைச்சகம் கைவிட்டது. புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் குறித்து 2019,2020ம் ஆண்டில் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி கேட்ட கேள்வியையும் உள்துறை அமைச்சகம் கைவிட்டது.
இதையும் படிங்க: எதற்கும் வக்கில்லாத திமுக .. நாடாளுமன்றத்தில் கிழித்து தோரணம் கட்டிய தம்பிதுரை..! ஆடிப்போன திமுக எம்.பி-க்கள்