"என்னையும் விஜயலட்சுமியையும் நேருக்கு நேர் உட்கார வைத்து விசாரித்தால், அரை மணி நேரத்தில் பிரச்னை முடிந்துவிடும்" என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், ''எப்படியாவது, எதன்ம் மூலமாகவாவது என்னை அசிங்கப்படுத்தி, என்னுடைய இந்த ஓட்டத்தின் வேகம் இருக்கிறதல்ல, அதை கொஞ்சம் தடுக்கலாம். மக்களுக்கு என் மீது ஒரு அன்பும், பாசமும் இருக்கிறதுல்ல. அதை சிதைத்து விடலாம். தனிப்பட்ட முறையில் என்னுடைய குணம் இருக்கிறது அல்லவா? பண்பு இருக்கிறது அல்லவா? அதை சிதைத்து விடலாம் என நினைக்கிறார்கள்.

அதனால்தான் இவன் குடிகாரன், பொம்பளை பொறுக்கி என்று பரப்புகிறார்கள்.இது எல்லா தலைவர்களுக்கும் கட்டமைக்கிறது தான். ஆனாலும், ஒரு அளவுக்கு மேல போகும்போது, இல்லை என்கிறதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்போது திராவிட அரசியல் என்னை எதிர்கொள்ள முடியாமல் கடைசியாக எடுத்து இருக்கும் ஆயுதம் இது.
இதையும் படிங்க: 15 வருடமா என்னையும், என் குடும்பத்தையும் கற்பழிக்கிறீங்க... பகீர் கிளப்பும் சீமான்...!
இதனாலெல்லாம் நாம் துவண்டு விட்டோம். அப்படி துவண்டால் நாம் ஒரு போராட்டக்காரன் கிடையாது. ஒரு லட்சியக்காரன் கிடையாது. அந்தப்பெண்ணை அழைத்துப் பேசி சரி பண்ண கூடிய அளவுக்கு இது பெரிய விஷயம் இல்லை. பெரிய குற்றமில்லை. அங்கு அந்த அம்மாவை வைத்துக்கொண்டு, என்னை ஒரு பக்கம் வைத்துக்கொண்டு அந்த அம்மா பேசுகிறார். நான் பேசுகிறேன்.

நேருக்கு நேர் உட்கார வைத்தால் ஒரு நொடியில் முடிந்துவிடும். நான் சென்ற முறையே சொன்னேன். இந்த மாதிரி கேட்பது தவறு, தேவையில்லாதது. அவரையும், என்னையும் ஒரு அரை மணி உட்கார வைத்தீர்கள் என்றால் அரை மணி நேரத்தில் முடிந்துவிடும். யார் பொய் சொல்கிறார்? யார் உண்மையை சொல்கிறார் என்று தெரிந்துவிடும். உங்களுக்கு இந்த பிரச்சனை தேவைப்படுவதனால் பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். விளங்குகிறதா?
இப்போது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றுதான் நீதிமன்றம் போனேன்.
அது எனக்கு சரி வரவில்லை. கை கொடுக்கவில்லை. அதனால் உச்ச நீதிமன்றம் போய் இருக்கிறேன். உறுதியாக நான் நம்புகிறேன், உச்ச நீதிமன்றத்தில் முற்றுப்பெற்று விடும் என்று நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “விருப்பமில்லாமல் கடத்தி வன்புணர்வு செய்தால்தான் குற்றம்...”- தன்னை நியாயப்படுத்தும் சீமான்..!