புதுச்சேரி பாஜக மாவட்ட தலைவர் தேர்தலுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதிஶ்ரீநிவாசன் தலைமையில் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளரக்ளிடம் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதிஶ்ரீநிவாசன், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் அதனை விசாரிக்க உயர்நீதிமன்றம் தனியாக அதிகாரிகள் குழுவை நியமிக்கிறது. தேசிய மகளிர் ஆணையம் தனியாக ஒரு குழு அனுப்புகிறது என்றால் தமிழக அரசுக்கு இது ஒரு அவமானம் இல்லையா என்றும், தமிழ்நாட்டில் நீங்கள் நியாயகமாக விசாரணை நடத்தவில்லை என நீதிமன்றம் ஏற்கனவே நிருபித்துள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் எங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தாலும் உடனடியாக அவர்கள் எந்த பின்புலுத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் மணிப்பூரில் கூட பிரதமர் உத்தரவின் பேரில் ஒரு நியாயமான விசாரணை நடைபெற்று வருவதாகவும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்க மாநில அரசு நடவடிக்கையில் உறுதியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. உயர்நீதிமன்றம் தனியாக புலனாய்வு குழுவை அமைக்கிறது என்றால் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லை என்றார். புதுச்சேரி மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் எங்கு பெண்களுக்கு பாதிப்பு நிகழ்ந்தாலம் அங்கு பாஜக அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராக தமிழக அரசு நடத்திய அநியாயத்திற்கு அவர்கள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும், பாஜகவினரால் நான் இணையதளம் வாயிலாக அபியூஸ் ஆனதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ள கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வானதி ஶ்ரீநிவாசன். ஆன்லைன் புல்லிங். ட்ரோல் பன்றது. மனை உலைச்சலுக்கு ஆளாக்குவது என்பது குறிப்பாக பெண்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அதிகம் பெண்கள் பாதுகாப்பிற்காக சட்டம் உள்ளது. அந்த சட்டத்தை யார் மீறினாலும் தவறு தவறு தான். அமலாக்கத்துறையின் சோதனை நடவடிக்கை என்பது அவர்களுக்கு கிடைக்கின்ற தகவலின் அடிப்படையால் தான் என்றும், தமிழகத்தின் பாஜக கட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அகில இந்திய தலைவராக நான் எனது வேலையை சிறப்பாக செய்கிறேன். அண்ணாமலையின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது என வானதி ஶ்ரீநிவாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரையில் பாஜக மகளிர் அணியினரை செம்மறி ஆடுகளுடன் ஒன்றாய் அடைத்து வைத்த காவல்துறை… போலீஸாருடன் வாக்குவாதம்