அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களை நாடு கடத்துவது ஒன்றும் புதிய செய்தி அல்ல பல ஆண்டுகளாக இந்த சம்பவம் நடைபெற்று வருகிறது. அவர்களை திரும்ப அழைத்து வருவது நமது கடமையாகும் என்று மத்திய வெளிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சட்டவிரோதக் குடியேறிகளின் நாடு கடத்தும் செயல்பாட்டு நடைமுறையை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா பின்பற்றி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் துன்புறுத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த விளக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் புகாரின் படி ஏதாவது அசோகரிகங்கள் நிகழ்ந்திருந்தால் அது குறித்து அமெரிக்காவிடம் நிச்சயம் பேசுவோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததாக நேற்று 14 இந்தியர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அவர்களின் கை கால்களில் விலங்குகள் போடப்பட்டிருந்ததாக. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி அமலியில் ஈடுபட்டனர் அமலியை தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு அவை மீண்டும் கூடும்போது அமைச்சர் இதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். மேலும் தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்கள் தவறானது என்றும் அவை கௌதமடா நாட்டிற்கு நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகளின் படம் என்றும் வெளியூர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கே முக்கியத்துவம்… அமெரிக்க வெளியுறவு செயலாளர் பதவி ஏற்ற பின் ஜெய் சங்கருடன் முதல் சந்திப்பு..!
இதையும் படிங்க: கள்ளத்தனமாக அமெரிக்கா சென்ற இந்தியர்களின் சோகக்கதை..! தலா ரூ.42 லட்சத்தை இழந்த அவலம்..