புதுவை சட்டப்பேரவையின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கான கூட்டம், கடந்த மார்ச் 10-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.புதுச்சேரியில் முதல்முறையாக காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கி நடைபெற்றது.

இதையடுத்து, மார்ச் 12- ஆம் தேதி முதல்வர் என்.ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். புதுச்சேரியில் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ.13,600 கோடிக்கான பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: குடும்பத்தலைவிகளுக்கு ஜாக்பாட்... முதலமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு...!

பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி ₹1,000 லிருந்து ₹2,500 ஆக உயர்த்துதல், மாதாந்திர முதியோர் ஓய்வூதியத்தை ₹500 அதிகரித்தல் மற்றும் பெற்றோரை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்தன.
இதைத் தொடர்ந்து, மார்ச் 11 மற்றும் 13-ஆம் தேதிகளில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே பெஞ்சல் புயல் நிவாரணம் முழுமையாக வழங்காததை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் தி.மு.க. காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் மாசி மகத்தை முன்னிட்டு, மார்ச் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். இதனால், சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து, சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை என்பதால் சட்டப்பேரவைக் கூட்டம் மார்ச் 17-ஆம் தேதி (இன்று) மீண்டும் கூடவுள்ளதாக பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் வியாழக்கிழமை அறிவித்தார்.

அதன்படி இன்று சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் கூடியது.அப்போது, சட்டப்பேரவையில் தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி சில கேள்விகளை எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மதிப்புமிக்க தலைவர் என்றும் மொழிக்காக பாடுபட்டவர் மற்றும் போற்றக்கூடிய தலைவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

எனவே, புதுச்சேரியில் ஒரு நல்ல இடத்திற்கு கலைஞரின் பெயர் சூட்ட பரிசீலிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் காரணமாக பொது இடத்தில் கலைஞருக்கு சிலை வைக்க முடியவில்லை என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என்.ஆர்.காங்கிரஸ் - விஜய்யின் தவெக கூட்டணி..? புதுச்சேரியில் பரபரக்கும் அரசியல் களம்.. அதிர்ச்சியில் பாஜக!!