திமுக எம்.பி., கதிர் ஆனந்த் புத்தாண்டு கொண்டாட துபாயில் முகாமிட்டுள்ள நிலையில் காட்பாடி காந்தி நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அவர் நடத்தி வரும் கிங்ஸ்டன் கல்லூரியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கதிர் ஆனந்த் வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் வீடு மற்றும் கிடங்கு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
மக்களவையில் பாஜக சீனியர் எம்பி.,க்களுக்கு எதிராக ஆவேசத்துடன் எழுந்து கதிர் ஆனந்த் எதிர்ப்புத் தெரிவித்தது தான் இந்த ரெய்டுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2024, டிசம்பர் மாதம் 14 தேதி மக்களவையில் விவாதத்தின் போது ஆ.ராசா பேசியது பாஜகவினரை கடுப்பாக்கியது. ‘‘இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவோம் என தேர்தலுக்கு முன் பாஜகவினர் கூறினர். இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நீங்கள் அடிப்படையையே மாற்ற முயற்சி செய்து முயற்சிக்கிறீர்கள்.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை ரெய்டு... இரவோடு இரவாக காவல் அதிகாரிகள் மாற்றம்... வசமாக சிக்கும் திமுக எம்.பி., கதிர் ஆனந்த்..!
கைகளை அறுவை சிகிச்சை செய்வதற்கும் தலையை அறுவை சிகிச்சை செய்வதற்கும் வேறுபாடு உள்ளது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையை நீங்கள் மாற்ற முயற்சிக்கிறீர்கள். இந்திய அரசியல் சாசன பலமுறை திருத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகம் மட்டுமே தாக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜனநாயகம், மதச்சார்பின்மை தாக்கப்படுகிறது. இந்த அவையில் எப்போதெல்லாம் ஜனநாயகம் பற்றி விவாதிக்கப்படுகிறதோ. அப்போதெல்லாம் ஆளுங்கட்சியினர் எமர்ஜென்சி, மிசா என்று முழங்குகின்றனர்.

நானும், கனிமொழியும் கைது செய்யப்பட்டபோது காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால், நான் ஒருபோதும் யாசகம் கேட்கவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த பிரச்சனைக்காக நிற்கிறோம் என்பதே முக்கியம்’’ என கடுமையாக பேசிக் கொண்டிருந்தபோது, ஆ.ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி.,க்கள் ஆட்சேபம் தெரிவித்து முழக்கம் செய்தனர். அப்போது ஆ.ராசாவின் பக்கத்தில் அமர்ந்து இருந்த கதிர் ஆனந்த் ஆவேசத்துடன் எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போது கதிர் ஆனந்தின் உடல்மொழிகள் சவடால் பேர்வழி போலும் சர்வாதிகாரம் நிறைந்ததாகவும் காணப்பட்டது.
ஆ.ராஜாவின், பேச்சை விட கதிர் ஆனந்தின் உக்கிரமான ஆவேசம் பாஜக சீனியர்களை கடுப்பாக்கியது. அந்த சம்பவத்தால் கோபமான பாஜக மேலிடம் கடும் கோபத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவம் நடந்து 15 நாட்களில் அமலாக்கத்துறை கதிர் ஆனந்த் வீடு, கல்லூரிகளில் ரெய்டு நடத்தி வருகிறது. 
இந்த ரெய்டு முன் இரவு வேலூர் மாவட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யபட்டனர். அதேபோல் சென்னை தலைமைச் செயலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த முறை கதிர் ஆனந்துக்கு பலத்த சிக்கல் ஏற்படலாம் என்றே கூறப்படுகிறது. இதனால் துரைமுருகன் நடுக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை ரெய்டு... இரவோடு இரவாக காவல் அதிகாரிகள் மாற்றம்... வசமாக சிக்கும் திமுக எம்.பி., கதிர் ஆனந்த்..!