கேரள மாநிலம் அழீக்கோடு நீர்காவு பகுதியில் உள்ள முசிரியன் கோயிலில் தெய்யம் திருவிழா கோலாகலமாக துவங்கி நடைபெற்றது. விழாவில் சுற்றூவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டுச் சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. வானில் வர்ணஜாலங்களை நிகழ்த்திய வான வெடிகளை மக்கள் உற்சாக கண்டு ரசித்தனர்.

அப்போது திடீரென மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதிக்குள் திடீரென நுழைந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. பட்டாசு எதிர்பாரத போது கூட்டத்தில் புகுந்ததாலும், கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் விலகிச்செல்ல முடியாததாலும் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி 5 பேர் காயமடைந்தனர். இதில் 12 வயது சிறுவனுன் அடக்கம். வெடிவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு மங்களூரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தண்ணியில எச்சில் துப்பி குடிக்க வச்சாங்க!! கேரளாவில் தலைவிரித்தாடும் ராகிங் கொடுமை..!

இந்நிலையில் அங்கு கூட்டத்தில் இருந்த மக்கள் தெரிவித்ததாவது; அதிகாலை 4 மணி அளவில் தெய்யம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வாணவேடிக்கை நடந்து கொண்டிருந்தது. மக்கள் உற்சாகமாக பார்த்துக்கொண்டும் தங்களுக்கும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டும் இருந்தனர். அப்போது வானில் பறந்த ராக்கெட் போன்ற ஒரு வெடி, திசை மாறி மக்கள் நின்றிருந்த கூட்டத்திற்குள் புகுந்தது. மக்கள் அங்கும், இங்கும் சிதறி ஓடினர். எனினும் கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர். சிலர் தவறி கீழே விழுந்ததும் நிகழ்ந்தது. அப்போது பட்டாசு பயங்கர சப்தத்துடன் வெடித்ததில் 5 பேர் காயமடைந்தனர்.

உடனே அருகில் இருந்த மக்கள் அவர்களை போலீசாரின் உதவியுடன் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அதில் 12 வயது சிறுவனும் காயம்பட்டது தெரிந்தது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த் நபரை மேல் சிகிச்சைக்காக மங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், என அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், இந்த விபத்து பாதுகாப்பு குறைபாட்டால் நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயில் நிர்வாகத்திடம் பட்டாசு வெடிக்க முறையாக அனுமதி பெற்று உள்ளீர்களா? அனுமதிக்கபட்ட அளவில் தான் பட்டாசில் வெடி மருந்து நிரப்பி இருந்தார்களா? பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் என்னென்ன பின்பற்றப்பட்டன? போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர். கோயில்களில் விழாக்கள் மற்றும் தீப்புகை தொடர்பான நடவடிக்கைகளில் கூடுதல் பாதுகாப்பு தேவை என்று அங்கிருந்த மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளாவில் பயங்கர விபத்து: சீன பட்டாசுகளால் பற்றிய தீ- 25க்கும் மேற்பட்டோர் பரிதாபதம்..!