இதுதொடர்பாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், "ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி இவ்வளவு வாக்குகள் வாங்கி இருப்பது, எப்படிப் பார்த்தாலும் திமுகவின் மீதான அதிருப்தி வாக்குகள் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. வெற்றிக்கு ஆயிரம் காரணம் சொல்லுகிறார்கள்! ஓர் ஆளும் அரசுக்கு எதிர் முகாம் உருவாவது வெறும் ஜனநாயக பண்பு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அது தவற விட்ட காரியங்களுக்கு ஆன விமர்சனமும்தான்.

சீமான் தனியாக நின்று இருமுனை போட்டி போட்டது மாதிரி இருந்தாலும் கூட அதன் அளவுகளுக்குள் மறைமுகமான பாஜக, அதிமுக ஓட்டுகள் இருந்திருக்கின்றன என்பதை ஒத்துக்கொள்ளும் வேளையில் வருகிற எதிர்கால கூட்டணிகளுக்குள் இப்படியான பரஸ்பரங்கள் நிகழ இருப்பதற்கான முன்னறிவிப்புதான் இந்தத் தேர்தல் என்றும்கூட வகைப்படுத்தலாம். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போல அங்கே அதிமுக போட்டி போட்டு இருந்தால் வென்றிருக்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கும். ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு இவ்வளவு பணம் காசுகளைக் கொடுத்த பிறகும் நாம் தமிழர் கட்சி இவ்வளவு வாக்குகளை வாங்கி இருக்கிறது என்றால் எவ்வளவு எதிர்வினைகள் திமுகவின் மீது மக்களுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! எதுவும் நிரந்தரமல்ல. காலங்களும் வினைகளும் கூடும்போது காட்சிகள் மாறிவிடும்!

ஈரோடு கிழக்கில் 2023 இடைத்தேர்தலில் 798 வாக்குகளே நோட்டாவுக்கு கிடைத்தன. அதுவே, 2025 இடைத்தேர்தலில் 6,079 (3.94%) வாக்குகள் பதிவாகி உள்ளன. பொதுவாக இடைத்தேர்தலில் நோட்டாவை மக்கள் நாடுவதில்லை. திமுக ஆட்சி மீது அதிருப்தி அடைந்த பலர், அதை எதிர்த்த வேட்பாளரை ஆதரிக்காமல் நோட்டாவை நாடியுள்ளனர்! திமுக ஆட்சி மீது விவசாயிகள், அரசு உழியர்கள், உழைப்பாளர்கள், பால் விலை, மின்கட்டணம் என மக்களின் பிரச்னை என்கிற நிலையில், அவர் 20,000 கடந்ததை வியப்பாக கூறுகின்றனர். அதிருப்தி அடைந்த பலர், அதை எதிர்த்த வேட்பாளரை ஆதரிக்காமல் நோட்டாவை நாடியுள்ளனர்!" என்று கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீமான் பேசிய பேச்சால் வாக்குகள் எல்லாம் போச்சா?... நாதக வேட்பாளர் விளக்கம்...!