''பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் கட்சியில் இருந்து விலகுகிறேன். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் வழியில் என் பயணம் தொடரும்'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் முன்பு அடித்துக் கூறி இருந்தார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்துததான் எங்கள் ஆட்சியே போச்சு.இல்லை என்றால் நானெல்லாம் ஜெயித்து இருப்பேன். ராயபுரம் தொகுதியில் நானெல்லாம் தோற்கிற ஆளா? மனம் திறந்து சொல்கிறேன். 25 ஆண்டுகளாக முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்தேன் நான்ோல்வி என்பதையே அறியாதவனாக இருந்தேன் நான். யாரால் தோற்றேன். பாஜகவால் தான் தோற்றேன். பாஜக இல்லை என்றால் நானெல்லாம் இந்நேரம் சட்டமன்றத்திற்கு போயிருக்கக்கூடிய ஆள். என் தொகுதி ராயபுரத்தில் 40 ஆயிரம் சிறுபான்மை இன மக்கள் ஓட்டு கிடைக்கவில்லை.

அவர்களுக்கு என் மீது கோபம் கிடையாது. சார் பாஜகவை கழற்றி விட்டு வந்துடுங்க ச் சொன்னார்கள். நான் அவர்களிடம் சொன்னேன். வேஸ்ட் லக்கேஜ்தான் வேற என்ன பண்ணுவது ..? சமயம் வரும்போதுழற்றி விட்டு விடுவோம் நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொன்னேன். அதேபோல் நேரம் வந்தது கழற்றி விட்டாச்சு. தமிழகம் முழுவதும் பார்த்தீர்கள் என்றால் 2019லும் சரி 2021லும் சரி, நாங்கள் தோற்றதுக்கு காரணம் பாஜக… பாஜக பாஜக மட்டும்தான்'' எனப் பேசி வந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.

இதையும் படிங்க: இனி எதிர்பாராத ட்விஸ்டுதான்.. மாதாமாதம் கட்சிகள் வந்து அதிமுக கூட்டணியில் சேரும்.. மாஜி அமைச்சர் கணிப்பு.!
எதெற்கெடுத்தாலும் பேட்டி கொடுக்கும் ஜெயகுமார் கடந்த 10, 12 நாட்களாக எங்கும் காணமுடியவில்லை. இதுொடர்பாக எதிர்கட்சியினரும்கூட, ''ஜெயகுமாரை காணவில்லை'' எனக் கிண்டலடித்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், தனது எக்ஸ்தளப்பதிவில் சித்திரை திருநாள் வாழ்த்துகள் கூறியுள்ள பதிவில் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று 2011ல் மாற்ரிக் காட்டிய மாண்புமிகு அம்மாவின் குருகுல மாணவனாய் அவர் வழியில் நின்று எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப்பதிவு பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது. பாஜக கூட்டணி அமைத்தால் அவர் முன்பு பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் கட்சியில் இருந்து விலகுகிறேன். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் வழியில் என் பயணம் தொடரும்'' எனக் கூறியது போல கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளாரா என்கிற சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

''நீங்க ராயபுரத்துல சுயேச்சையா போட்டியிடணும். கண்டிப்பா ஜெயிப்பீங்க'' எனவும், ''நீங்கதான் உண்மையான அதிமுக ஆள். உங்கள் தலைவர் இபிஎஸ்-க்கு நீங்க எல்லாத்தையும் செஞ்சீங்கன்னு எங்களுக்குத் தெரியும். தயவுசெய்து இந்த 200 ரூபாய் ட்ரோல்களை ஒருபோதும் கேட்காதீர்கள். அவர்களை பற்றி உங்களுக்கு நல்லாத் தெரியும். 2026- க்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தில் நிதியமைச்சராக நீங்கள் ஆவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்'' எனத் தெரிவித்து வருகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
இதையும் படிங்க: இதுதான் இறுதி அஸ்திரம்..! இ.பி.எஸுக்கு எதிராக ஓ.பி.எஸ் டீம் போட்ட பகீர் சபதம்- கிளப்புங்கள் வண்டியை...