திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசேஷம் பகுதி ராஜராஜ நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சென்னையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஏழ்மையிலும் 3 மகள்களையு நன்றாக படிக்க வைத்து வளர்த்துள்ளார். கோவிந்தராஜின் மூன்றாவது மகள் நிஷா. வயது 28. இவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு முடித்துள்ளார். தமிழகத்தில் சில காலம்செவிலியராக பணியாற்றிய நிஷா, பின்னர் சவுதி அரேபியாவுக்கு அங்கும் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த 15 தினங்களுக்கு முன்னர் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். எப்போதும் போல குடும்பத்தினருடன் விடுமுறையை சந்தோஷமாக கழித்துள்ளார். அம்மா கையில் உணவருந்தி, அக்காக்களுடம் பேசி சிரித்து மகிழ்ந்துள்ளார்.

இந்நிலையில் 15 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று 24 ஆம் தேதி அதிகாலை சவுதி அரேபியா செல்ல நிஷா திட்டமிட்டு இருந்தார். இதற்கான விமான டிக்கெட் சகிதம் அனைத்தும் வாங்கி வைத்திருந்தார். சவுதி அரேபியா சென்று இனி அடிக்கடி உங்களை வந்து பார்ப்பேன் என குடும்பத்தினருடன் பேசினார். இந்த நிலையில் இரவு மற்ற இரு சகோதரிகளுடன் வீட்டில் இருந்த நிஷா வீட்டின் கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். கழிவறைக்கு சென்ற நிஷா வெகு நேரம் ஆகியும் வெளியில் வரவில்லை என்று சந்தேகப்பட்ட மற்ற இரு சகோதரிகளும் கழிவறைக்கு சென்று பார்த்துள்ளனர். கதவை பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவேயில்லை. உள்ளிருந்தும் நிஷா சப்தம் எழுப்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சகோதரிகள் உதவிக்கு மற்றவர்களை அழைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொல்கத்தாவை கலக்கடிக்கும் குடும்ப தற்கொலை? மணிக்கட்டை அறுத்துக்கொண்டு பெண்கள் மரணம்.. ஆக்சிடெண்டில் சிக்கிய ஆண்கள்..!

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாத்ரூம் கதவை உடைத்து பார்த்த சகோதரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பாத்ரூம் உள்ளே கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் நிஷா உயிரிழந்து கிடந்தார். கதறி அழுத சகோதரிகள் இது குறித்து மன்னார்குடி நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவம் இடத்திற்கு வந்த மன்னார்குடி நகர போலீசார் நிஷாவின் உடலை கைப்பற்றி மன்னார்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் நிஷா சவுதி அரேபியாவில் பணியாற்றும் போது கேரளாவை சேர்ந்த இளைஞரை காதலித்ததாக தெரியவந்துள்ளது.

அந்த இளைஞருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அறிந்த நிஷா மன உளைச்சலில் தவித்துள்ளார். இதன காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது . இதுகுறித்து மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

எந்த ஒரு செயலுக்கும் தற்கொலை முடிவாகது என்பதையே மனதத்துவ நிபுணர்களும், டாக்டர்களும் திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் சிறார்கள் மனதில் எழும் தற்கொலை எண்ணத்தை களைய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்கொலை எண்ணத்தை தவிர்க்கவும், அதிலிருந்து மீண்டு வர கவுன்சிலிங் வழங்கவும் அரசு உதவி புரிகிறது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை வழங்கி வருகிறது. கட்டணமில்லா தொலைபேசி ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044- 24640050 ஆகிய எண்களை அழைக்கவும். தகுந்த மனநல ஆலோசகர்கள் தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட சிறந்த கவுன்சிலிங் வழங்க காத்துக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING நெற்பயிர் சேதமானதால் விரக்தி- விவசாயி விஷமருந்தி தற்கொலை!