தமிழகம் முழுவதும் பாலியல் சீண்டல் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன. இதன் தொடர்ச்சியாக ஏராளமான ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், குறிப்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்தன.

இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிகளில் பயிலக்கூடிய அந்த மாணவ மாணவிகளிடம் பாலியல் தீண்டலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்... 14 வயது சிறுமியும் 16 வயது சிறுவனும் திருமணம்.!

தற்போது படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என விரிவான தகவலை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி மாணாக்கர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் 238 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிலே ஆசிரியர் அல்லாதவர்களும் அடக்கம் என்றும், அதில் 36 பேர் வெளியிலும் சிறையிலும் இருக்கிறார்கள் என்றும் 11 பேர் குற்றம் நிரூபிக்க முடியாமல் மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார்கள் என்றும் புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் நான்கு பேர் இறந்துவிட்டார்கள், 46 பேர் மீது மார்ச் மாதம் 10 ஆம் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அந்த 46 பேரில் 23 பேர் குற்றம் செய்திருப்பதாக நிரூபணம் ஆகி இருக்கக்கூடிய காரணத்தால் அந்த 23 பேரும் பணியிலிருந்து நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டு இருக்கின்றார்.

அவர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பள்ளியை பொறுத்தவரையிலே ஆசிரியர்கள் என்பவர்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் எனவே இது போன்ற தேவையற்ற வேலைகளில் அவர்கள் ஈடுபடுவது ஒருபோதும் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகமே பேரதிர்ச்சி... 3 வயது குழந்தையை சிதைத்த 17 வயது காமுகன்... செங்கலால் அடித்ததில் உயிருக்கு போராட்டம்...!