அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கூறி பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படும் நபர்கள் சார்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அந்த மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன.

அந்த மணுக்கள் மீதான விசாரணையின் பொழுது அமைச்சராக தொடர்வதற்கு செந்தில் பாலாஜி விரும்புகிறாரா? அவர் அமைச்சராக தொடரும் பட்சத்தில் இந்த மணுக்களை தகுதியின் அடிப்படையில் விசாரிக்கலாம் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. செந்தில் பாலாஜியினுடைய கருத்தைப் பெற்று தெரிவிக்குமாறு அவரது தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணையின் பொழுது செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்குத் துறை வாதத்தின் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: அஞ்சு கட்சி அமாவாசை, பத்து ரூபாய் தியாகி... அமைச்சர் செந்தில் பாலாஜியை டேமேஜ் ஆக்கிய மாஜி அமைச்சர்.!

இந்நிலையில் தற்பொழுது செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கூறி அமலாக்குத் துறை சார்பில் நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தில் மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு அடுத்த முறை அதாவது ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மணுக்கள் விசாரணைக்கு வரும்பொழுது அந்த மனுக்களுடன் இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
2014-ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற்றது.

இந்தப் பணி நியமனங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2018-ஆம் ஆண்டு இந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் விசாரணை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, இந்த வழக்கில் பணமோசடி நடைபெற்றதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை அவரை கைது செய்தது. கிட்டத்தட்ட 15 மாதங்களாக அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் இருந்த செந்தில் பாலாஜி செப்டம்பர் 26ம் தேதி 2024ல் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அலை வீசுகிறது... அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி கணிப்பு..!