நாமக்கல் மாவட்டம் பெரிய மணலியைச் சேர்ந்த பிரேம் ராஜ் என்பவர் தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும் பிரணிதா பிரனீத் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களது குடும்பத்தினர் கடந்த மூன்று நாட்களாக யாருமே வெளியில் வராமல் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை கவனித்த வீட்டின் உரிமையாளர் சந்தேகம் அடைந்து முதலில் கதவை தட்டி உள்ளார். யாருமே நீண்ட நேரமாக கதவை திறக்காததால் அருகில் இருந்த ஜன்னலை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது தாய் மற்றும் இரு குழந்தைகள் சடலங்கலாக தரையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் இது குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மூன்று உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இவர் மூவரும் உயிரிழந்தது எப்படி, கணவரின் நிலை என்ன என்பது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ராகுலுடன் நெருக்கமாக போஸ் கொடுத்த இளம் பெண் மர்ம கொலை..! சூட் கேஸில் உடல் திணிப்பு
அப்போது அவர்கள் வீட்டில் சோதனை செய்தபோது போலீசாருக்கு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் பிரேம் ராஜ், ஆன்லைன் ஆப் மூலம் எங்களுக்கு இந்த வாரத்தில் மட்டுமே 50 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த கடனை எப்படி கட்டுவது என்று தெரியவில்லை என்றும் எங்களை மன்னித்து விடுங்கள் என எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் உடனடியாக பிரேம் ராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உள்ளனர். ஆனால் பிரேம் ராஜன் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் போலீசாரின் சந்தேகங்கள் இந்த மரணத்தில் கூடுதலாக இருந்தன. கடன் தொல்லையால் குடும்பத்தினர் அனைவருமே தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் எழுதப்பட்டிருந்த நிலையில், மனைவி மற்றும் இரு குழந்தைகளின் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன.
கணவரின் நிலை என்ன, கணவர் கொலை செய்தாரா அல்லது கணவர் தப்பி ஓடியதனால் மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொன்றுவிட்ட தற்கொலை செய்தாரா என இந்த மரணங்களில் சந்தேகங்கள் வழுக்கின்றன. மேலும் இது குறித்து போலீசார் கூறுகையில், தப்பியோடிய பிரேம் ராஜ் பிடிபட்டால் அனைத்து குழப்பங்களுக்கான விடை கண்டறியப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவி மற்றும் மகளை கொன்ற சகோதரர்கள்.. குழம்பிய போலீஸ் ஸ்கெட்ச் போட்டு தூக்கியது எப்படி..?