திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மற்றும் தங்கமணி. இவர்களின் மகள் வித்யா. வயது 22. வித்யா கோவை அரசு கல்லூரியில் முதுகலை பட்டம் பயின்று வந்தார். திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞர் அதே கல்லூரியில் வித்யாவுடன் படித்து வந்துள்ளார். மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெண்மணி, வித்யாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாகவும், பெண் கொடுக்க வித்யாவின் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 30 ஆம் தேதி வித்யாவின் பெற்றோர் கோயிலுக்கு சென்றுள்ளனர். மாலை வீடு திரும்பிய நிலையில், வித்யா மீது பீரோ விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். மயங்கிய நிலையில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வித்யாவின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்காவில்லை. அவசரம் அவசரமாக் வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் வித்யாவின் உடலை அருகில் இருந்த சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டா மூலம் பழக்கம்.. திருப்பூர் லாட்ஜில் கஞ்சா பார்ட்டி.. அலேக்காக தூக்கிய போலீஸ்..!

இதனையடுத்து வித்யாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது காதலன் வெண்மணி என்பவர் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் இன்று வித்யாவின் வீட்டில் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்துள்ளனர்.

மேலும் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வித்யா ஆணவக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: இரவில் திருட்டு.. பகலில் உல்லாசம்.. இரும்பு ராடோடு வீதி உலா.. கதிகலங்க வைத்த திருடர்கள் கைது..!