சுதந்திரப் போராட்ட மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம், பராக்கிரம தினமாக மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரிதான கடிதங்களை வெளியிட்டு அவரை கௌரவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், "நேதாஜியின் மையம் இந்தியாவிற்காக இரத்தம் சிந்தியது இவை வரும் கடிதங்கள் அல்ல சுதந்திர இந்தியாவுக்கான அவருடைய கனவுகளின் தொலைநோக்கு சான்றுகள் என புகழாரம் சூட்டப்பட்டு இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடி தனது உரையில், "நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளான இன்று, முழு தேசமும் அவரை மரியாதையுடன் நினைவுகூர்கிறது. இந்த ஆண்டு பராக்கிரம தின கொண்டாட்டங்கள் ஒடிசாவில் உள்ள அவரது பிறந்த இடத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: உங்க அப்பா என்ன பூட்டு வியாபாரியா? - ஸ்டாலினை வம்பிழுக்கும் ஆர்.பி.உதயகுமார்!
விழாவை ஒட்டி பிரதமர் மோடி தனது உரையில் நேதாஜியின் தியாகத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:- "நேதாஜி ஒரு வளமான குடும்பத்தில் பிறந்தார். சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஒரு மூத்த அதிகாரியாக இருந்து வசதியான வாழ்க்கையை நடத்தியிருக்கலாம்.

இருப்பினும், சுதந்திரத்திற்கான தேடலில் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் அலைந்து திரியும் சிரமங்கள் நிறைந்த கடினமான பாதையை நேதாஜி தேர்ந்தெடுத்தார். சுகமான சூழலுடன் கூடிய வசதிகள் நிறைந்த வாழ்க்கைக்கு அவர் கட்டுண்டுவிடவில்லை.
நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜி ஆசாத் ஹிந்த் ஃபவுஜை உருவாக்கினார். இதில் ஒவ்வொரு பிராந்தியம் மற்றும் வகுப்பைச் சேர்ந்த துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்தனர்.

வெவ்வேறு மொழிகளைக் கொண்டிருந்தாலும், அவர்களின் பொதுவான உணர்வு நாட்டின் சுதந்திரமாக இருந்தது. இந்த ஒற்றுமை இன்றைய வளர்ந்த இந்தியா இலக்கை அடைவதற்கு ஒரு பாடம். அன்று சுதந்திரத்துக்காக ஒற்றுமை அவசியமானது போல, இப்போது வளர்ந்த இந்தியாவை உருவாக்க அது மிக முக்கியமானது.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. நேதாஜி சுபாஷால் ஈர்க்கப்பட்டு, நாம் அனைவரும் வளர்ந்த இந்தியா எனும் ஒரே குறிக்கோளுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும். இதுவே நேதாஜிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்" என்று கூறினார்
இதையும் படிங்க: “இப்ப போட்டுறா வெடிய” - சொன்னதை செய்து காட்டிய அண்ணாமலை; கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி!