நடிகை அளித்த பாலியல் புகாரால் சிக்கலில் சிக்கியுள்ள சீமானுக்கு அடுத்த தலைவலியாக புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மீது நடிகை அளித்த பாலியல் புகார் பூதாகரமாகி தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான் மீது அவருடன் இணைந்து படத்தில் நடித்த நடிகை ஒருவர் பாலியல் புகார்களை கூறி வந்தார். சீமான் மீது அவர் புகார் அளிப்பதும், அதை திரும்ப பெறுவதுமாக இருந்தது.
இந்த நிலையில் தான் நடிகை அளித்த பாலியல் புகார் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கியதாகவும், பல முறை கருகலைப்பு செய்ததாகவும் கூறி புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சீமான் மீது விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி சீமானிடம் விசாரணை மேற்கொள்ள அவருக்கு காவல்துறை தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் சீமான் குறிப்பிட்ட நாளில் ஆஜராகாததால், அவரது வீட்டிற்கே சென்ற போலீசார் சம்மனை ஒட்டினர். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் சம்மனை கிழித்தனர்.
இதையும் படிங்க: நான் பாலியல் தொழிலாளியா டா நாயே..? கண்ணீர் மல்க புலம்பும் நடிகை..

இந்த சம்பவத்தால் சீமான் வீட்டில் கைகலப்பாக அது பெரிய சர்ச்சையானது. இதேநேரம் அந்த நடிகை தன்னுடன் விருப்பப்பட்டு உறவில் இருந்ததாகவும், தன் மேல் எந்த ஒரு தவறும் இல்லை என்ற விதத்தில் சீமான் செய்தியார்களிடம் ஆவேசமாக பேசி வருகிறார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க மற்றொரு பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்ற படையை சேர்ந்த வீரலட்சுமி என்பவர் குரல் கொடுத்துள்ளார். நடிகைக்கு நீதி வேண்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாக அறிவித்தார். மேலும் தன்னிடம் பாதிக்கப்பட்ட நடிகை பேசும் போதும், சீமானால் 7 முறை கருவுற்று கருக்கலைப்பு செய்ததாகவும் அதனால் கர்பப்பையில் பிரச்சனை ஏற்பட்டு கர்பப்பையை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் மன அழுத்தத்துக்கு அந்த நடிகை ஆளகை இருப்பதாக கூறிய விஜயலட்சுமி சீமானுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு பொறுப்பை உணர்ந்து பதிலளிக்காமல் அநாகரீகமாகவும், ஆவேசமாகவும் பேசி வரும் சீமானுக்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே தன் மீதான புகாரை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு, விசாரணை, செய்தியாளர்களின் கேள்வி என நாலா பக்கமும் இம்சையால் உள்ள சீமானுக்கு நடிகையும் திட்டி வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி - அமைச்சர் ரகுபதி