தன்னை தானே கடவுள் என கூறிக்கொள்ளும் நித்தியானந்தா திருவண்ணாமலையில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1978ம் ஆண்டு பிறந்தவர். பரமஹம்ச நித்தியாந்தா என்று அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் ராஜசேகரன். எளிமையாக புரியும் தமிழில் நகைச்சுவையாக பேசுவது நித்யானந்தாவை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான கோடி புரள ஆரம்பித்தது நித்யானந்தாவின் சாம்ராஜ்யம்.

2010 ஆம் ஆண்டு நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. ஒரே நாளில், நித்யானந்தாவின் ஆன்மீக பயணம் தலைகீழாக மாறியது.
இதையும் படிங்க: மோசமான நிலையில் எல் சால்வடார் சிறை... டிரம்பால் நிரம்பி வழியும் கைதிகள்!!

தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள், வன்கொடுமை வழக்குகளுக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட நித்தியானந்தா ஜாமீனில் வெளிவந்த நிலையில், வெளி நாட்டுக்கு தப்பியோடினார்.அதன் பிறகு யூடியூப், பேஸ்புக் வீடியோக்கள் மூலம் ரி எண்ட்ரி கொடுத்த நித்யானந்தா, கைலாசா என்ற நாட்டை கட்டமைத்துவிட்டதாகவும், தனியாக கொடி, ரூபாய், பாஸ்போர்ட் என்று தனி அரசையே நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

கைலாசாவின் இணையதளமாகக் குறிப்பிடப்படும் https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்றும் தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தைக் கடைபிடிக்க முடியாத, உலகம் முழுவதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் கூறப்பட்டது.

இது மட்டுமா, யார் வேண்டுமானாலும் கைலாசாவிற்கு வாருங்கள் என அழைப்பும் விடுக்கப்பட்டது. அதன் பின்னர், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்துடன் கைலாசா நாடு சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்து கொண்டதாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி வீடியோ, புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியானது. போதனைகள், நக்கல் நையாண்டி, நடனம் என ராஜ வாழ்க்கை வாழ்ந்துவந்த நித்யானந்தா மறைந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு நித்தி இறந்துவிட்டதாகவும், இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் செய்ததாகவும் அவர் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போட்டோவுக்கு 'NO' சொன்ன மனைவி..! பாறாங்கல்லால் தாக்கப்பட்ட கொடூரம்..!