தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal Gift) மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஆண்டு தோறும் இந்த தொகை வழங்கப்பட்டு வந்தது.திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும்கூட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவித்த தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாய் ரொக்கம் அறிவிக்கவில்லை .மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்க முடியாத அரசு திமுக அரசு என எதிர்கட்சிகள் விமர்ச்சித்துள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் அரியகுளத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகம் முன்னேற்ற கழகம் தற்போது வரை அங்கம் வகித்து வருகிறது ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவளிப்பது குறித்து செயற்குழு பொதுக்குழு கூட்டி முடிவு அறிவிக்கப்படும் தேர்தல் காலத்தில் கூட்டணியில் இருந்தாலும் பொதுக்குழு செயற்குழுவின் முடிவை பொருத்தே தங்களது ஆதரவை அறிவிப்போம் என தெரிவித்தார்.
தேர்தலில் வாக்கு பெறுவதற்கு மட்டுமே பொங்கல் பண்டிகைக்கான ரூபாய் ரொக்கமாக வழங்கப்படுகிறது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்தது பொங்கல் பரிசு தொகையில் ரொக்கமாக ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவில்லை அதன் காரணமாக பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் உள்ளது பொங்கல் பரிசாக 2000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மத்திய அரசை களங்கப்படுத்தும் விதமாக மக்களிடம் விஷப் பிரச்சாரத்தை தமிழக அரசு செய்து வருகிறது. அம்பேத்கர் வகுத்த சட்டத்தின் படி மத்திய மாநில அரசுகள் என்னென்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்பது திட்டமிடப்பட்டுள்ளது துணைவேந்தர் தெருவில் ஆளுநருக்கு அதிகாரம் கொடுத்ததில் என்ன தவறு உள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது ஆளுநருக்கு அதிகாரம் கொடுக்கக் கூடாது என திமுக மத்திய அரசிடம் ஏன் வலியுறுத்தவில்லை பாஜக மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும் நிலையில் மாநில அரசிற்கு அனைத்து அதிகாரங்களையும் கொடுக்க வேண்டும் என என்ன பொறுப்பின் அடிப்படையில் தமிழக அரசு சொல்கிறது என தெரிவித்தார்
இதையும் படிங்க: ஆளுநரும் ஆட்சியும் ரயில் தண்டவாளம் போல..அதிமுக செம்மலை ரிக்வெஸ்ட்..!