இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று சீமான் பேசுகையில்," 2010ஆம் ஆண்டில் இருந்தே மீனவர்களின் பாதுகாப்புக்காகப் போராடி வருகிறோம். இது தொடர் கதையாகி விட்டது. மீனவர் வாழ்க்கையின் மீது துளியும் மதிப்பளிக்காத அரசுகள்தான் இங்கே ஆட்சிக்க தொடர்ந்து வருகின்றன. ஓட்டுக்காக மட்டுமே கவலைப்படும் இந்த ஆட்சியாளர்கள், மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் கொடுக்கும் திமுகஅரசு, ஒரு மீனவர் உயிரிழந்தால், அவரது குடும்பத்திற்கு என்ன கொடுக்கிறது? படகை பறித்துக் கொண்டால் மீனவரின் வாழ்வாதாரம் பறிபோகாதா? இந்தியாவின் ஒரு மாநில அளவு கூட இல்லாத ஒரு சின்ன நாடு இலங்கை. இவ்வளவு பெரிய துணைக் கண்டத்தின் குடிமக்களின் படகை பறித்து, அரசுடைமையாக்கி ஏலம் விடுகிறது. அதை வேடிக்கை பார்க்கும் அதிகாரத்தை எப்படி பார்ப்பது? இந்த நாடும், ராணுவமும் எங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை என் இன மக்களுக்கு எப்படி வரும்?
ஒரு சின்ன நாடு இலங்கை கடற்படையினரிடம் இருந்து தன் நாட்டு மக்களைப் பாதுகாக்காத கடற்படை, என்ன பாதுகாப்பு பணியை செய்கிறது? இந்தக் கேள்வி நமக்கு எழுமா? எழாதா? தமிழ் மக்களின் ஓட்டு இனிக்கிறது. கவாழ்க்கை மட்டும் கசக்குதா? எங்க வரியை வாரி சுருட்டி செல்லும் நீங்கள், எங்களின் உரிமை மற்றும் உயிரைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. குஜராத் மீனவன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டால் விரட்டிச் சென்று மீனவனை மீட்டு வருகிறது. அதுபோல, எங்கள் மீனவனை தடுக்காதது ஏன்? அப்போது, எங்களை இந்த நாட்டு குடிமகனாக இந்த நாடு ஏற்கிறதா? இல்லையா? கச்சத்தீவை கொடுக்கும் போது வேடிக்கை பார்த்தது போல, எங்களின் உயிர் போவதையும் வேடிக்கை பார்க்கிறார்.

கச்சத்தீவு என்னுடைய உடமை. எல்லைத் தாண்டி வரும் கேரள மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதில்லை, துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லை. ஏனென்றால், அந்த மாநிலம் அப்படியொரு பாதுகாப்பை கொடுக்கிறது. ஆனால், தமிழகத்தில் அப்படியில்லை.
குரலற்ற, அதிகாரமற்ற மீனவர்கள் வாழும் பகுதிகளில் தான் நச்சு ஆலைகளை நிறுவுகின்றனர். எண்ணூர் எல்லாம் குப்பை கூடாரம் ஆகிவிட்டது. தமிழகத்தின் நச்சு ஆலைகளின் கூடாரம் கடலூர். இந்தியாவின் நச்சு ஆலைகளின் கூடாரம் தமிழகம்.
எனக்கு ஒரு முறை அதிகாரம் கொடுத்து பாருங்கள். நான் பதவியில் இருக்கும் போது என் மீனவனை தொட்டு விட்டால், நான் பதவியை விட்டு விலகிடுறேன். பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரையில் தமிழக மீனவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. டெல்லியில் ரூ.150 கோடி ஊழல் நடந்ததாக கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்தீங்க? இங்க ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக சொல்றீங்க? அப்புறம் ஏன் நடவடிக்கை எடுக்கல? டாஸ்மாக் ஊழல் மீது நடவடிக்கை எடுங்க என்று அண்ணாமலை போராடினார்.
இதையும் படிங்க: போராட்ட களத்திற்கு வரும் விஜய்... ஹேப்பி மோடில் வரவேற்ற திருமா...!

யாரை எதிர்த்து போராடுகிறார்? யாருக்கு கோரிக்கை வைத்து போராடுகிறார்?நாடக ஆசிரியர் முதல்வர் ஆனார். தற்போது அவரது மகன் முதல்வராக இருக்கிறார். தற்போது அதே நாடகம் தொடர்கிறது, சகித்துக் கொள்ள வேண்டியதுதான்" என்று சீமான் கூறினார்.
பின்னர் சீமானிடம் சென்னையில் முதல்வர் நடத்திய கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர், 'ஒரு அர்த்தமில்லாதது,' என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணிக்கு தயார் ஆனா.... அறிவாலயத்திற்கு சீமான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ...!