அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றுவதே தங்கள் ஆட்சியின் நோக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்துப் பணிகளும் ஓராண்டுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரசுக்கு எதிராகவே ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று முதலமைச்சர் அப்போது விமர்சித்தார். ஆனால், ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு பெருமை சேர்ப்பதால் அவர் அவ்வாறே செயல்படட்டும் என்றும் அப்போது தான் நாட்டு மக்களுக்கு உண்மை புரியும் என்றும் முதலமைச்சர் சிரித்தபடி கூறினார். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும் எதிர்கட்சிகள் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றன என்றும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: கருணாநிதி மகள் எப்படி நாடாராக முடியும்..? ஒரு அப்பாவுக்கு இரண்டு சாதி இருக்குமா..? கனிமொழிக்கு சீமான் சம்மட்டி அடி..!

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், பெரியார் தான் எங்கள் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர். அப்படிப்பட்டவரை மரியாதைக்குறைவாக பேசுபவர்களுக்கு நான் மரியாதை கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். பெரியாரை தரக்குறைவாக பேசுபவர்களை நான் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் முதலமைச்சர் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: 'அடிச்ச அடில எல்லோரும் போட்டோவை தூக்கிட்டு திரியுறாங்க.... சோளி முடிஞ்சது..!' ட்ராக் மாறும் சீமான் அரசியல்..?