சமீபத்திய நாட்களில் எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல இணைய தளங்களை திறந்தாலே அனிமேஷன் வரையிலான புகைப்படங்கள் ட்ரெண்டிங்கில் இருப்பதை பார்த்திருப்போம். அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட், கால்பந்து வீரர்கள், ஆகியோரில் தொடங்கி சாமானிய மக்கள் வரை இது போன்ற அனிமேஷன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

அனிமே என்று அழைக்கப்படும் மாதிரியான அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி அனிமேஷன் புகைப்படங்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.மிகவும் ட்ரெண்டிங்காக சென்றுகொண்டிருக்கும் இந்த தொழில் நுட்பத்தால் சைபர் கிரைம் குற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: அம்மாடியோவ்..! 38 கோடி ஹவாலா பண மோசடி..! தங்கக் கடத்தலில் கைதான நடிகை ரன்யா மீது புதிய புகார்..!

ஜிப்லி ஆர்வலர்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜிப்லி கலையை சுற்றியுள்ள சாத்தியமான ஆபத்துகளை பயனர்கள் குறைத்து மதிப்பிட கூடாது என்றும் பயனர்கள் தனிப்பட்ட பயோமெட்ரிக் தரவை ஏ.ஐ., செயலிகளிடம் வழங்குவதால், சமர்ப்பிக்கப்பட்ட தரவை பயனர்கள் எளிதில் நீக்க முடியாது என்பது கவலைக்குரிய விஷயம் என்றும் கூறியுள்ளனர்.
ஜிப்லி போட்டோக்களால் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது என்று எச்சரித்த போலீசார் அங்கீகரிக்கப்படாத ஆப்கள், இணையதளங்களுக்கு புகைப்படங்களை வழங்கும் போது தவறான செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறினர்.

பயோமெட்ரிக் தகவல்களை வைத்து விஷமிகள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை கூட திருட முடியும் என்றும் இது போன்ற மோசடி நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டிந்தாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டாலோ உடனடியாக https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மருதமலையில் மாயமான வெள்ளி வேல்... வசமாக சிக்கிய போலி சாமியார்...!