தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை பொதுமக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின்கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை நியாயிவிலைக்கடையில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி, துவக்கி வைத்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அரியலூர் மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைக்கப்பட்டது. இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 2,48,876 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, துவக்க விழா வாரணவாசி ஊராட்சி நியாய விலைக்கடையில் அரிசி பெறும் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகிய பொருட்களை பொங்கல் பரிசுத் தொகுப்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை நியாய விலைக்கடைகளில் சுலபமாக பெற்றுக்கொள்ளும் வகையில் சம்மந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் மற்றும் மின்னணு குடும்ப அட்டையினை எடுத்துக்கொண்டு பொருட்கள் பெற்றுச் செல்ல நியாய விலைக்கடைக்கு வர வேண்டும். இதேபோன்று நியாய விலைக்கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே தங்களுடைய நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும், அங்கிகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ, இதர நபர் வாயிலாகவோ பரிசுத்தொகுப்பு பெற அனுமதி வழங்கப்படமாட்டாது. பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள், கர்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்
இரத்தினசாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: நொடியில் வந்து விழுந்த ட்ரோன் கோமரா.. ட்ராபிக் இன்ஸ்பெக்டர் கண்களை காப்பாற்றிய கேப் ..!