டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தமாதம் 5ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பாஜக கட்சி ஆட்சியைப்பிடிக்க வேண்டும் என்ற தாகத்தில் ஏராளமான இலவச அறிவிப்புகளை மக்களுக்கு வாரி வழங்கியுள்ளது
பிரதமர் மோடி இலவசங்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பதையும், பாஜக இலவசங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டதை சுட்டிக்காட்டி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் “ இலவசங்கள் தேசத்துக்கு நல்லது, சேதம் விளைவிக்காது என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது, வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி நடக்கிறது.3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக இருக்கிறது, 20 ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் பாஜக திணறிவரும் நிலையில் இந்த முறை டெல்லியை கைப்பற்றவும் வியூகங்களை அமைத்து பணியாற்றி வருகிறது.
பிரதமர் மோடி “ இலவச கலாச்சாரத்துக்கு” எதிரானவர். இதை பலமுறை தனது பேசின்போது வெளிப்படுத்தியுள்ளார். இலவசங்களை மக்களுக்கு வழங்கி அதன் மூலம் வாக்குகளைக் கவர்வது என்பது தேசத்துக்கே ஆபத்தான போக்கு என்றும் பிரதமர் மோடி இலவசகங்களை வழங்கும் மாநிலங்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா நேற்று வெளியிட்டார். அதில் ஏராளமான இலவசங்களை டெல்லிமக்களுக்காக பாஜக வெளியிட்டிருந்தது. பெண்களுக்கு மாதம் ரூ.2500 ஊக்கத்தொகை, ரூ.500க்கு சமையல் சிலிண்டர், ரூ5 லட்சத்துக்கு சுகாதாரத் காப்பீடு, மலிவுவிலை உணவகமான அடல் கேண்டீன், முதியோர் ஓய்வூதியத்தை ரூ.500 உயர்த்துதல், கர்ப்பிணிப்பெண்களுக்கு 6 வகையான பொருட்கள், ரூ.21 ஆயிரம் உதவித்தொகை ஆகியவற்றை வெளியிட்டார்.
இதையும் படிங்க: மோடி அரசால் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து.. உதயநிதி பரபரப்பு பேச்சு..

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்து, கிண்டல் செய்துள்ளார்.
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நிருபர்களிடம் பேசுகையில் “ ஆம் ஆத்மி திட்டங்களை “காப்பி”(நகல்) அடித்து பல்வேறு இலவசத் திட்டங்களை டெல்லி தேர்தலில் அறிவித்துள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இந்த இலவசங்களை ஏற்கமாட்டார்.
ஆனால், பிரதமர் மோடி இலவச அறிவிப்புகள் தவறானவை அல்ல என்று இப்போது ஒப்புக்கொள்ள வேண்டும். இலவசங்களை நான் வழங்கியபோது தவறு என விமர்சித்தது தவறு என பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்.

கெஜ்ரிவால் இலவசங்களை மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார் என பாஜக விமர்சித்தது. ஆனால், இன்று பாஜக தேசியத் தலைவர் நட்டா டெல்லி மக்களுக்க இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
ஆதலால், இலவசங்கள் ஒருபோதும் தவறல்ல, தேசத்துக்கு எந்த விதத்திலும் பாதகத்தை ஏற்படுத்தாது என்பதை பிரதமர் மோடி ஏற்க வேண்டும். இலவசங்கள் என்பது கடவுளின் பிரசாதம், தேசத்துக்கு நல்லது.
இலவசங்கள் சரியானவை என்று பிரதமர் மோடி முன்வந்து ஏற்க வேண்டும், நான் இலவசங்கள் வழங்கியது சரியானது என அவர் அறிவிக்க வேண்டும். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட எதையும் செய்யப்போவதில்லை, பின் எதற்காக மக்கள் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறார்கள். சட்டம் ஒழுங்கை மாநிலத்தில் கையில் வைத்திருக்கும் மத்திய அரசு அதை நிலைநாட்ட முடியவில்லை, அவர்களின் தேர்தல் அறிக்கை என்பது பொய்களின் கட்டு” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மன்மோகன் சிங் மீது திடீரென பாஜகவுக்கு அக்கறை: காங்கிரஸிடம் புதிய கோரிக்கை..