விஜய் கட்சி ஆரம்பித்ததால் சீமானுக்கு மனநிலை பாதித்து விட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, பெரியார் மண்ணில் வெடிகுண்டு வீசுவேன் புல் பூண்டு கூட முளைக்காது என்று சீமான் பேசி இருக்கிறார். பிரபாகரன் வெடிகுண்டை கொடுத்ததாக சொல்கிறார். தமிழ்நாடு தாங்காது பற்றி எரியும் என கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிறார் என்றார்.
ஏதோ பிரச்சனை சீமானுக்கு இருக்கிறது. அவருக்கு விஜய் தான் பிரச்சனை. வேறு யாரும் பிரச்சனை இல்லை. விஜய் கட்சி ஆரம்பித்தது தான் சீமானின் மனநிலை பாதிப்புக்கு காரணம் என கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: சீமானால் சிக்கலில் சிக்கிய சீதாலட்சுமி... புயலைக் கிளப்பும் திருமுருகன் காந்தி - ரெண்டே நாள் தான் கெடு!
சீமான் அமைதியாக நல்லவராக தான் இருந்தார். விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு பிறகுதான் இவர் இவ்வாறு மாறிவிட்டார். இவ்வளவு டென்ஷன் விஜயை பார்த்து சீமானுக்கு பயமும் நடுக்கமும் வந்துவிட்டது. அதை மற்றவர்களிடம் காண்பிக்கிறார். வெடிகுண்டு வீசுவேன் புல் பூண்டு முளைக்காது தமிழகம் பற்றி எரியும் என பேசுகிறார்.
சீமானை ஏதாவது ஒரு கட்சி ஆதரிப்பதாக சொல்லிவிட்டால் நான் அரசியலை விட்டு வெளியேறி விடுகிறேன். எடப்பாடி பழனிச்சாமி சீமானுக்கு எதிராக பேச மாட்டார் அவருக்கு பெரியார் பற்றி தெரியாது ஓபிஎஸ் பேசுவதற்கு பயப்படுகிறார் என்றார்.
இதையும் படிங்க: சீமானை விடாமல் விரட்டும் பெரியார் மண்... சாட்டை துரைமுருகன், சீதாலட்சுமி உட்பட 7 பேருக்கு ஆப்பு!