கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரைச் சேர்ந்த 60 வயதான ராம் சேட் என்பவர், சாலையோர சிறிய கடையில் காலணிகளை தைத்து, பழுது பார்க்கும் பணி செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் காரணமாக அவர் தனது சொந்த காலனி பிராண்ட் பெயரான ராம்சேட் மூச்சி என்ற சொந்தக் கடைக்கு அதிபராக மாறி வருகிறார்.

அந்த தொழிலாளியின் கைவினை திறத்தை கவனித்த ராகுல் காந்தி அவருக்கு உதவி செய்ய முன் வந்தார். முதலில் அவருடைய பணியை மேம்படுத்த இயந்திரம் ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார். பின்னர் அவரை ராகுல் டெல்லிக்கு அழைத்தார்.
இதையும் படிங்க: சபாஷ் சாம்பியன்ஸ்..! இந்திய அணிக்கு ஜனாதிபதி புகழாரம்..!
அங்கு அவர் தனது கைகளால் செய்யப்பட்ட காலணிகளை சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு அவர்களுடைய இல்லத்தில் பரிசாக வழங்கினார்.

தனது தொழில் முனைவோர் கனவை மேலும் வலுப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி ராம் சேட்டை மும்பைக்கு வருவதற்கு ஏற்பாடு செய்தார். அங்கு நன்கு அறியப்பட்ட தோல் தொழில் முனைவோரும் வடிவமைப்பு பிராண்ட்டுமான சாமர் ஸ்டுடியோவின் நிறுவனரான சுதீர்ராஜ்பர் என்பவரை சந்தித்தார். இதுவரை விமான பயணம் பற்றி அறிந்திறாத அந்த ஏழை தொழிலாளி ராம் சேட்டுக்கு விமானத்தில் போய் இறங்கியது புதிய அனுபவமாக இருந்தது.
"மரம் மற்றும் ரப்பரை பயன்படுத்தி புதுமையான காலணி மற்றும் பை வடிவமைப்புகளை கண்டேன். எந்திர அடிப்படையிலான கைவினை நுட்பங்களை பரிசோதித்தேன். ராகுல் காந்தியும் சுதிர் ராஜ்பரும் எனது திறமைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல என்னை ஊக்குவித்தனர்" என்று சுல்தான் பதரில் உள்ளூர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

அப்போதிலிருந்து ராம்சேட் தனது பணியை விரிவுபடுத்த தொடங்கினார். சில கைவினை கலைஞர்களை கொண்டு சிறிய ஒரு பட்டறை அமைத்து சிறந்த கருவிகளை முதலீடு செய்துள்ளார். ஒரு காலத்தில் இந்த தொழிலில் ஆர்வம் இல்லாத அவரது மகன் இப்போது ஒவ்வொரு நாளும் கைவினை பொருளை கற்றுக் கொள்வதற்காக பல மணி நேரம் தந்தையுடன் செலவழிகிறார்.
ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு 100 முதல்150 ரூபாய் மட்டுமே சம்பாதித்த இந்த தொழிலாளி இப்போது ஆயிரக்கணக்கான வருமானத்தை ஈட்டி தனது சொந்த பிராண்டு உருவாக்க வேண்டும் என்ற கனவை நினைவாக்கி இருக்கிறார்.

கடந்த ஆறாம் தேதி அன்று சமூக ஊடகங்களில் தங்கள் சந்திப்பை பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி, 'ராஜ்பரின் வெற்றி கதையை தலித் தொழில் முனைவோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்போது பாரம்பரிய கைவினைஞர்களின் ஆற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று பாராட்டு தெரிவித்தார்.
ராம் சேட்டை பொறுத்தவரை கனவு என்பது உயிர் வாழ்வது மட்டுமல்ல; தனது புதிய பிராண்ட் வடிவம் பெறுவதன் மூலம் மற்ற உள்ளூர் கைவினைஞர்களை தங்கள் கைவினை பொருட்களின் மீது நம்பிக்கை வைத்து பெரிய விஷயங்களுக்காக பாடுபட ஊக்குவிக்க உதவும்" என்று அவர் நம்புகிறார். காங்கிரஸ் தலைவர்கள் இந்த முயற்சியை பாராட்டினார். இது அடிமட்ட தொழில் முனைவோருக்கு ஒரு முன்மாதிரி என்றும் புகழ்ந்துரைத்தார்.
இதையும் படிங்க: இந்துக்கள் கோபப்படுவார்கள்: ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகப் பேசாதீர்கள்…. ராகுலுக்கு அட்வைஸ்