திருப்பூரில் இருந்து திருப்பதிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு மாத கர்ப்பிணி ஒருவர் சொந்த ஊரான கோயம்புத்தூர் செல்வதற்கு பயணம் செய்து உள்ளார். இவர், பெண்கள் பட்டியில் தனியாக பயணம் செய்ததை அறிந்த ஹேம்ராஜ் என்பவர் அப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் உதவி கேட்டு கூச்சலிட முயன்ற அந்த பெண்ணை, ஹேமராஜ் அப்பெண்ணை மிதித்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் தலையில் காயமடைந்து மயக்கம் அடைந்த பெண்ணை ரயில்வே போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பனின் வாக்குமூல அடிப்படையில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஹேமராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் தொடரும் பாலியல் சீண்டல்..மூவருக்கு வலைவீச்சு..போலீசாரின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் படு காயங்களோடு மீட்க பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டதில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசுவை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் நீண்ட நேரமாக போராடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி வயிற்றில் இருந்தன் சிசு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வயிற்றிலிருந்த நான்கு மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று விட்டதை அடுத்து, இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முன்னதாக பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை நேரில் சந்தித்து கருணைத் தொகைக்காண காசோலையை ரயில்வே அதிகாரிகள் பெண்ணிடம் வழங்கினர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் பாகிஸ்தான் சாயல் கொடி..? தன்மானத்தோடு களத்தில் இறங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..!