இன்று காதலர் தினம் குதூகலமாக கொண்டாடப்பட்டு வந்தாலும், நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் கொடூரமான பயங்கர தாக்குதல்களில் ஒன்று நடைபெற்றதும், இதே பிப்ரவரி 14ஆம் தேதி தான்.
புல்வாமா தாக்குதல்: துரதிஷ்டவசமான அந்த நாளின் பிற்பகலில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வாகன அணிவகுப்பு மீது, தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். நமது துணிச்சல் மிக்க 40 வீரர்கள் இதில் உயிர்த்தியாகம் செய்தனர் .

புல்வாமா தாக்குதலின் ஆறாவது ஆண்டு நினைவு நாளான இன்று, அவர்களின் வீர மரணத்தை நினைவுபடுத்துவதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற கடுமையான அழைப்பாகவும் அமைந்துவிட்டது.
இதையும் படிங்க: காதலர் தினம்.. இன்று உலகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்.. காதல் ஜோடிகளின் பெயரை பொறிக்கும் ஆட்டோகிராப் செடி தெரியுமா?
அன்று பிற்பகல் 3 15 மணியளவில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட எஸ்யூவி காரை ஓட்டி வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், நமது ரிசர் போலீஸ் வீரர்கள் சென்ற வாகனம் மீது மோத வைத்தான். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. நாடு முழுவதும் கடும் துக்கத்தையும் சீற்றத்தையும் தூண்டியது, இந்த கோழைத்தனமான தாக்குதல்.

உடனடி பதிலடி: நாடு முழுவதும் ஒன்றுபட்டு, கடுமையான கண்டனம் எழுந்தது. பிரதமர் நரேந்திர மோடி, நமது துணைச்சலான வீரர்களின் தியாகங்கள் வீண் போகாது என்று கூறி, வலுவான பதிலடி அளிக்கப்படும் என்று அப்போது உறுதி அளித்தார். நாடு தழுவிய விழிப்புணர்வு போராட்டங்கள் நடத்தப்பட்டன. வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து "பாகிஸ்தானின் மிகவும் ஆதரவான நாடு' என்கிற அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. உலக அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த ராஜ தந்திர முயற்சிகளை தொடங்கியது. மேலும் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று பாலக்கோடு வான்வெளி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் இருந்த "ஜெய்ஸ் ஈ முகமது" பயிற்சி முகாமை குறிவைத்து தாக்கி அழித்தன.

ஆறாவது ஆண்டு நினைவு நாளான ஊன்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த துணிச்சலான அந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாடு முழுவதும் இன்று ஒன்று கூடுகிறது. குறிப்பாக புல்வாமா மற்றும் தியாகிகளின் சொந்த ஊர்களில் நினைவு புகழாஞ்சலி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
"நமது துணிச்சலான சி ஆர் பி எப் படை வீரர்களின் வீரத்தையும் அவர்களுடைய விலைமதிப்பற்ற தியாகத்தையும் நாம் எப்போதும் நினைவு கொள்வோம். அவர்களின் வீரம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 'டுவிட்' செய்திருக்கிறார்.

பிரதமர் மோடி அஞ்சலி: "நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த நமது வீரர்களின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறோம். அவர்களின் தியாகம் ஒவ்வொரு இந்தியரையும் பயங்கரவாதம் அற்ற இந்தியாவை நோக்கி பாடுபட தொடர்ந்து ஊக்குவிக்கும்" என்று, பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள தனது அஞ்சலியில் தெரிவித்து இருக்கிறார்.
புல்வாமா தாக்குதல் இந்திய வரலாற்றில் ஒரு வேதனையான அத்தியாயம். ஆனால் நமது நாட்டின் உறுதிப்பாட்டின் சக்தி வாய்ந்த அடையாளமாகும். இது, ஒற்றுமையாகவும் விழிப்புடனும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகவும் உறுதியுடன் இருக்க நமக்கு நினைவூட்டுகிறது. உயிரிழந்தவர்களின் நினைவு கூறும் அதே வேளையில் அவர்களின் பாரம்பரியத்தை நிலை நிறுத்தவும் வலுவான பாதுகாப்பான இந்தியாவை கட்டி எழுப்பதற்கும் அயராத பாடுபடவும் உறுதி எடுப்போம்.
இதையும் படிங்க: காதலர் தினம்.. இன்று உலகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்.. காதல் ஜோடிகளின் பெயரை பொறிக்கும் ஆட்டோகிராப் செடி தெரியுமா?