இழுத்தடித்து விட்டீர்கள்...
"நீங்கள் சந்தேகங்களை எழுப்பி இழுத்தடித்து விட்டீர்கள்" என்று நீதிமன்றம் குற்றம் சாட்டியிருக்கிறது.
"கால அட்டவணை தெளிவாக உள்ளது. சட்டமன்ற அமர்வு நடைபெறாமல் தடுக்க நீங்கள் இழுத்தடித்து விட்டீர்கள்" என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: டெல்லியில், வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி!

பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சி தலைமையிலானஅரசின் மதுபானக் கொள்கை தொடர்பாக சிஏஜியின் அறிக்கை இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில், இந்த முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக - ஆம் ஆத்மி இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
நேர்மை குறித்து சந்தேகம், சிஏஜியின் அறிக்கையை சபாநாயகரிடம் தாக்கல் செய்வதில் தாமதம் செய்ததற்காக ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசை டெல்லி உயர் நீதிமன்றம் கண்டித்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா அமர்வு, “ஆளுநருக்கு அறிக்கைகளை அனுப்புவதில் ஏற்பட்ட தாமதமும், இந்த விஷயத்தை நீங்கள் கையாள்வதும் உங்கள் நேர்மை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்த விவகாரத்தை நீங்கள் தொடர்ந்து இழுத்தடிப்பது துரதிர்ஷ்டவசமானது.
நீங்கள் உடனடியாக அறிக்கைகளை சபாநாயகருக்கு அனுப்பி, அவையில் இது குறித்த விவாதத்தைத் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை.” என்றும் 'குட்டு'வைத்துள்ளது.
இந்த அறிக்கைகளை சபாநாயகர் அனுப்பி வைப்பதில் டெல்லி அரசு உடனடியாக செயல்பட்டு விவாதத்தை தொடங்கி வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
இதற்கு பதில் அளித்த டெல்லி அரசு தரப்பில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமர்வுகளை எப்படி நடத்துவது என்ற கேள்வியை எழுப்பியது. அதன் பிறகு விசாரணை பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த விசாரணையின் போது டெல்லி சட்டசபை செயலகம் பிப்ரவரியில் அதன் பதவிக்கால முடிவடைந்த நிலையில் நகர நிர்வாகம் குறித்த சிஏஜி அறிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்வதால் எந்த பயனும் ஏற்படாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.
சிஏஜி அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்வது தொடர்பாக பாஜக எம்எல்ஏக்கள் 7 பேர் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதற்கு முன்பாக பாஜக எம்எல்ஏக்களின் மனு தொடர்பாக டெல்லி அரசு சபாநாயகர் மற்றும் மற்ற எதிர் மனுதாரர்களிடம் உயர் நீதிமன்றம் பதில் கேட்டிருந்தது. 14 அறிக்கைகளும் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் டெல்லி அரசு தெரிவித்து இருந்தது.
இதனிடையே டெல்லி அரசு, இதில் அரசியல் நோக்கம் உள்ளது. எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம் கூறி இருந்தது.
இதையும் படிங்க: சிவசேனா (உத்தவ்) கட்சியும் "இந்தியா கூட்டணி"யில் இருந்து விலகல்: மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி