உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா உக்ரைனை ஆதரித்து வருகிறது. உக்ரைன் அமெரிக்காவிடமிருந்து பில்லியன் கணக்கான இராணுவ உதவியைப் பெற்றுள்ளது. ஆனால், டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது. இப்போது அமெரிக்கா, ரஷ்யாவுடன் நெருங்கி வருவதாகத் தெரிகிறது. டிரம்பின் நண்பர், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ரஷ்யாவை, அமெரிக்காவுடன் நெருக்கமாகக் கொண்டுவர உதவியுள்ளார்.

சவுதி அரேபியா இப்படிச் செய்வார் என்று ஜெலென்ஸ்கியால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால், ஜெலென்ஸ்கி மே 2023-ல் ஜெட்டாவில் நடந்த அரபு உச்சி மாநாட்டிற்கு மிகுந்த நம்பிக்கையுடன் சென்று அங்குள்ள முஸ்லிம் நாடுகளிடம் உதவி கேட்டிருந்தார். அப்போது, ஜெலென்ஸ்கி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், பிரதமர் முகமது பின் சல்மான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் போன்ற பிற வளைகுடா அரபு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்தார்.
அந்த நேரத்தில் சவுதி இளவரசர் மோதலைத் தீர்க்க ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார். ஆனால், ஜெலென்ஸ்கி அதை நிராகரித்தார். அமைதிக்கான ஒரே சாத்தியமான உக்ரைனின் ஒரே நோக்கம், ரஷ்ய வீரர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். இப்போது சவுதி அரேபியா, அமெரிக்காவிற்கும் -ரஷ்யாவிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை எளிதாக்கி, உக்ரைனை அதிலிருந்து விலக்கி வைத்துள்ளது.

இதையும் படிங்க: கும்பமேளாவில் கடத்தலோ, திருட்டோ இல்லை… ஆனால், மௌனி அமாவாசை அன்று... டிஜிபி கூறிய உண்மை..!
அரபு உச்சிமாநாட்டில் தனது உரையில், ஜெலென்ஸ்கி, இஸ்லாமிய வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளித்தார். உக்ரைனில், ரஷ்ய வன்முறையின் முதல் பாதிக்கப்பட்டவர்கள் கிரிமியன் முஸ்லிம்கள் என்று வாதிட்டார். உக்கரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கிரிமியன் முஸ்லிம்களை உக்ரைனின் முஸ்லிம் கலாச்சாரத்தின் மையம் என்றும், உலகளாவிய இஸ்லாமிய உலகின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த, இருக்க வேண்டிய ஒரு ஒரு பகுதி உக்ரைன் என்றும் கூறினார்.

அவரது இந்தக் கருத்துக்களுக்கு அப்போது பெரும் ஆதரவு கிடைத்தது. ஆனால் இப்போது அரபு நாடுகளின் நாட்டம், ரஷ்யாவை நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது, அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகள் நன்றாக இல்லை. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நல்லதாக மாறினால் அது அரபு நாடுகளுக்கு நல்ல செய்தியாக இருக்கும். காரணம், ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள் காரணமாக, அரபு நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய முடியவில்லை.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும்... கதறும் பெற்றோர்!!