தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஏழை மாணவ,மாணவியர் இந்தி படிப்பதை தடுத்து நிறுத்தினால், 356வது சட்டப்பிரிவு படி திமுக ஆட்சி கலைக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான, சுப்பிரமணியன் சுவாமி மிரட்டல் விடுத்துள்ளார்.
இன்று அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விடுத்துள்ள சிறிய அறிக்கையில் திமுகவை மிரட்டும் விதத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். பழைய தில்லி பகுதியில் வசித்து வரும் மதுரை சோழவந்தனைச் சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, ஹார்வாட் பல்கலைக்கழகத்தின் பிரபலமான பேராசிரியர் ஆவார்.

பின்னர் அவர் இந்திய அரசியலில் கால் தடம் பதித்து பல சர்ச்சைக்குரிய மற்றும் உலகப் புகழ் பெற்ற விஷயங்களில் தொடர்புடையவர் ஆவார். மத்திய வர்த்தகத் துறை மற்றும் நிதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். தனது மாநிலங்களவை எம்.பி பதவி முடிந்துவிட்ட நிலையில் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தனது வழக்குகளை வாதாடி வந்தார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளியின் பித்தலாட்டம் ... கேள்விக்குறியான 19 மாணவர்களின் எதிர்காலம் ...!
அவ்வப்போது மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், தனது தனிப்பட்ட கருத்துக்களையும் பேட்டிகள், மற்றும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருவது சுப்பிரமணிய சுவாமியின் வாடிக்கை. சமீப காலமாக பாஜகவில் எந்த பதவியும் சுப்பிரமணியன் சுவாமிக்கு வழங்கப்படாததால் மோடி மீது கடுமையான கோபத்தில் இருந்த சுவாமி தொடர்ந்து அவரை கீழ்த்தரமாகவும் மோசமாகவும் விமர்சித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் தான் தமிழகத்தில் நடைபெற்று வரும் மும்மொழி கொள்கை தொடர்பான பிரச்சனையில் பாஜக- திமுக என கடுமையான வார்த்தை போர் சென்று கொண்டிருக்கும் வேளையில் சுப்பிரமணியன் சுவாமியும் களத்தில் குதித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ள அவர்,ஹிந்தி படிக்கும் தமிழர்களை திமுக தடுத்து நிறுத்த முடியாது,அப்படி தடுத்து நிறுத்தினால் திமுக அரசாங்கம் ஆர்ட்டிகள் 356 ஐ பயன்படுத்தி கலைக்கப்படும், நான் மத்திய அமைச்சராக இருந்த பொழுது 1991 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக பதவி வகித்தேன்,அப்போது விடுதலைப்புலிகள் தொடர்பு திமுகவுக்கு இருந்ததால் என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சியை கலைத்தேன்,பிறகு நடைபெற்ற தேர்தலில் வெறும் இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே திமுகவினர் பெற்றனர் என திமுகவை மிரட்டும் தொணியில் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்தை பார்த்த திமுக வினர் மிகுந்த எரிச்சலடைந்துள்ளனர்
இதையும் படிங்க: ஒரே ஒரு இமெயில்... விறுவிறுவென தனியார் பள்ளி முன்பு குவிந்த பெற்றோர்கள்... மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!