20.03.25 அன்று கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உறுப்பினர் வாஹிதுர் ரஹ்மான் ஜெய்னுல்லாபுதீன் என்பவரை பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 -ன் விதிகளின் கீழ் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவர் இன்று அவர் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றம், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிறப்பு நீதிமன்றம், வாஹிதுர் ரஹ்மானை அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சி பொதுச் செயலாளர், உறுப்பினர் வீடுகளில், எட்டு மணி நேரம் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் இருவரின் டிஜிட்டல் பரிவர்த்தனை தகவல்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நியூ எக்ஸ்டென்ஷன் 1வது வீதியில், வசிப்பவர் ராஜிக். கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சியின் வடக்கு மாவட்ட பொது செயலாளராக உள்ளார். இவர் சிறுமுகை சாலையில் உள்ள பழைய இரும்பு கடையில், கார் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், 20.03.2025 அன்று, 8:00 மணிக்கு இவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடி.. இனி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை..!
நியூ எக்ஸ்டென்ஷன் இரண்டாவது வீதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உறுப்பினர் வாஹித்தூர் ரகுமான் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சின்ன காமணன், நிர்மலா, செல்வம் உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நியூ எக்ஸ்டென்ஷன், 1வது வீதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் செயலாளர் ராஜிக் வீட்டில், மத்திய அமலாக்க துறையினர் சோதனை செய்தனர்.

அமலாக்கத்துறையினர் ராஜிக் வீட்டிலிருந்து சோதனை முடித்து வெளியே வந்தனர். எட்டு மணி நேரம் தொடர்ச்சியாக, அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடித்தபின், அமலாக்கத் துறை அதிகாரிகள்வெளியே சென்றனர். எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் இருவர் வீடுகளிலும் சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவர்களின் டிஜிட் டல் பரிவர்த்தனை தொடர்பான சில ஆவணங்களை, எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக வாஹித்தூர் ரகுமானை அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்தனர். இன்று அவர் சிறப்பு நீதிமன்றம், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு நீதிமன்றம் வாஹித்தூர் ரகுமானை அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2022ம் ஆண்டு இந்திய அரசால், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் இருந்தபோது, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவருக்கு சொந்தமான, பிளைவுட் கடையினுள் பெட்ரோல் கொண்டு வீசிய வழக்கில் என்.ஐ.ஏ.,வால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இவர் கைது செய்யப்பட்டவர்.
இதையும் படிங்க: தேமுதிக-வை திமுக கூட்டணிக்கு தட்டித் தூக்க வைக்கும் விஜய்..! இப்படியொரு பின்னணியா..?