தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜரானார்.

அப்போது நீதிபதி ஜே.பி. பர்திவாலா, “மாநில அரசு ஒப்புதலுக்காக அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுத்து நிறுத்தியபோது 'அவரது மனதில் ஏதோ ஒன்று' இருந்துள்ளது. இருப்பினும், மசோதாக்களில் தனக்கு எரிச்சலூட்டும் விஷயங்கள் குறித்து ஆளுநர் தெரிவிக்கவில்லை. எனவே, அவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்திருக்கிறார். தனது ஒப்புதலை அளிக்க மறுத்திருக்கிறார். பின்னர் திடீரென்று அவற்றை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்காக அனுப்பி இருப்பதாக அவர் கூறுகிறார்" என்று தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இரு தரப்பும் எழுத்துபூர்வ வாதங்களை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு.. பட்டியலினத்தவர் மீது குற்றச்சாட்டு.. சிபிஐ விசாரணை கேட்கும் திருமாவளவன்

மேலும், ‘மசோதாவுக்கு ஒப்புதல் தர முடியாது என மறுப்பு தெரிவித்தால், அதை அப்போதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்க வேண்டும். முக்கியமான அரசியல் சாசன பதவியை வகிக்கும் ஆளுநர் தனது நிலைப்பாட்டை தெளிவாக அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும். மசோதாக்களில் ஆட்சேபம் இருந்தால் ஆளுநர் இவ்வளவு காலம் அமைதி காத்தது ஏன்?’ என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதையும் படிங்க: மசோதா முரண்பாடுகளை கவர்னர் தெரிவிக்க வேண்டும்..! முட்டுக்கட்டை நீடிக்க கூடாது... மீண்டும் விசாரணை