தமிழ்நாட்டில் முதன்முறையாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை தனியாரிடமிருந்து வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
விடுமுறை மற்றும் பண்டிகை காலங்கள் தொடர்ச்சியாக வருவதால் தமிழகத்தில் போக்குவரத்துறை சார்பில் பொதுமக்களின் வருகைக்கு ஏற்ப பல்வேறு சிறப்பு பேருந்துகள், அதேபோல பொதுமக்களின் வருகைக்கு ஏற்ப அந்த போதுமான பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

தற்போது தமிழகத்தில் முதல் முறையாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஸ்லீப்பர் வகை பேருந்துகளை தனியாரிடம் இருந்து வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பண்டிகை காலம் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில், தென் மாவட்டங்களுக்கு அதிக தொலைவில் செல்லக்கூடிய பேருந்துகள் குறைந்த அளவு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதையும் படிங்க: டோல்கேட் கட்டண உயர்வு எதிரொலி..! சுங்கச்சாவடிகளில் போராட்டம்..!

போக்குவரத்துறை சார்பில் தற்போது முதல் கட்டமாக 20 தனியார் ஆம்னி பேருந்துகளை எடுப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மே மாதம் முதல் வாரத்தில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து அடுத்த கட்டமாக பேருந்துகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தரப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் தனியாரிடமிருந்து பேருந்துகளை வாடகைக்கு பெற்று தேவைக்கு ஏற்ப இயக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பிலும் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் இயக்க போக்குவரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிங்க: முதல்முறையாக சட்டசபையில் நயினார் நாகேந்திரன்.. சபாநாயகர், எம்எல்ஏக்கள் வாழ்த்து மழை..!