திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் உள்ள தனியார் எஸ்டேட்டில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவர் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. டெட்டனேட்டர் வெடித்து உயிரிழந்த இளைஞர் கேரளா மாநிலம், இடுக்கியைச் சேர்ந்த சிபு என்கிற இளைஞர் என்பதும் தெரிய வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள தனியார் எஸ்டேட்டில் அந்த இளைஞர் சிபு தலைமறைவாக தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் உள்ள 17 வது கொண்டை ஊசி வளைவு அருகாமையில் உள்ள தனியார் ஸ்டேடில் ஆண் சடலம் கிடப்பதாக நேற்று இரவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கே கிடந்த ஆண் சடலத்தை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருள்கள் கிடந்ததால் அதனை போலீசார் கையகப்படுத்த முயன்றனர். அப்போது அந்த டெட்டனேட்டர் ஒன்று வெடித்ததில் போலீசார் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன், கியூபிரிவு போலீசார், வெடிடுகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டு தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆடிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டிக்கொன்ற கணவன்.. விருதுநகரில் பரபரப்பு..!

இறந்த நபர் கேரள மாநிலம், இடுக்கி பகுதியைச் சேர்ந்த சிபு என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அந்த நபர் அங்கே இருந்து 10 டெட்டனேட்டர்களை கேரளாவில் இருந்து திண்டுக்கல், சிறுமலைக்கு கொண்டு வந்ததும் போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிபு என்ற இளைஞர் எதற்காக கேரளாவில் இருந்து திண்டுக்கல் சிறுமலைக்கு டெட்டனேட்டர்களைக் கொண்டு வந்தார்? வேறு ஏதும் சதித்திட்டம் தீட்டுவதற்காக சிறுமலை பகுதியில் சிபு தனியாக வந்தாரா? அல்லது சதித் திட்டம் திட்டி கும்பலுடன் வந்தாரா? தனியார் எஸ்டேட்டிற்குள் எப்படி டெட்டனேட்டர்களை கொண்டு வந்தார்? என்கிற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: 'நான் ஹிந்துவாகப் பிறந்தேன்..! ஹிந்துவாக சாவேன் மறைவேன்..! காங்கிரஸாருக்கு டி.சிவக்குமார் பதிலடி!